Published:Updated:

'டாக்டர்களின் சம்பளத்திலிருந்து நஷ்டஈடு வேண்டும்'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை ஆவேசம்

பாலமுருகன். தெ
'டாக்டர்களின் சம்பளத்திலிருந்து நஷ்டஈடு வேண்டும்'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை ஆவேசம்
'டாக்டர்களின் சம்பளத்திலிருந்து நஷ்டஈடு வேண்டும்'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை ஆவேசம்
'டாக்டர்களின் சம்பளத்திலிருந்து நஷ்டஈடு வேண்டும்'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை ஆவேசம்

சிவகங்கை மாவட்டம், புதுவயல் சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் பெண்ணுக்கு நர்ஸ்கள் பிரசவம் பார்த்ததோடு, பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்துபோனது. "டாக்டர்கள் சம்பளத்திலிருந்து ஐம்பது லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும். அப்போதுதான் குழந்தையின் உடலை வாங்கிச்செல்வேன்" என்று தந்தை ஆவேசமாகக் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலதி என்ற பெண் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாள்களாகியும் டாக்டர் வராததால் நர்ஸ்கள் மட்டுமே பிரசவம் பார்த்திருக்கிறார்கள். தேவையான மருத்துவ உபகரணங்கள், டாக்டர் இல்லாததால் பெண்குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே  மாலதி உயிரிழந்தார். தகவல் அறிந்து அவரது சொந்த ஊரான வன்னிக்குடி கிராமமே திரண்டது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டது. மாலதியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இவர்களுக்கு ஆதரவாக  மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தினார்கள். தாசில்தார் நாகநாதன், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடந்த  பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் யசோதா மணியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலதியின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றார்கள். இந்த சோகம் சம்பவம் மறைவதற்குள் காரைக்குடியை அடுத்த புதுவயல் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவயல் சுகாதார நிலையத்தில் கல்லூரைச் சேர்ந்த தேவகி என்பவர் நேற்றிரவு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். டூட்டி டாக்டர் லாவண்யா மருத்துவமனையில் இல்லாததால் பணியிலிருந்த நர்ஸ்கள் சேர்ந்து பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து போனது. ''இங்கு மூன்று ஆம்புலன்ஸ்கள், இரண்டு டாக்டர்கள் இருந்தும் அவர்கள் பணியில் இல்லாததே குழந்தை இறந்து போனதுக்கு முக்கிய காரணம்'' என்கிறார்கள் குழந்தையை பறிகொடுத்த உறவினர்கள்.

'டாக்டர்களின் சம்பளத்திலிருந்து நஷ்டஈடு வேண்டும்'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை ஆவேசம்

இறந்த குழந்தையின் தந்தை புண்ணியகுமாரிடம் பேசும்போது, "என் மனைவியை வாடகை காரில் அழைத்து வந்தேன். அப்போது நர்ஸ்களிடம்  காரைக்குடி போயிடுறேன்னு சொன்னப்ப இல்ல, டாக்டருக்குத் தகவல் சொல்லியாச்சு, வந்துருவாங்கனு சொன்னாங்க. யாருமே வரல. விடியற்காலையில் டாக்டர் ஆனந்த்ராஜ் வந்தார்.108 ஆம்புலன்ஸ் காரைக்குடியிலிருந்து வந்தது. சோதனை செய்தபோது குழந்தை இறந்துபோனதாக தகவல் சொன்னாங்க. இவ்வளவு அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் எதுக்கு மருத்துவமனையில் இருக்கணும். இவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கணும். சம்மந்தப்பட்ட டாக்டர்கள் சம்பளத்திலிருந்து ஐம்பது லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். அப்பதான் என் குழந்தையை இங்கிருந்து எடுத்துச்செல்வேன்" என்றார் ஆவேசத்துடன்.

குழந்தை பிறக்க ஆபரேசன் தியேட்டருக்கோ, நார்மல் டெலிவரிக்கோ தயாராகும்போது குழந்தைகள் நல டாக்டர், அறுவை சிகிச்சை டாக்டர், மயக்கவியல் டாக்டர், நர்ஸ்கள் என ஒரு டீம் இருக்க வேண்டும். ஆனால் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் அப்படி நடப்பதில்லை. இவர்களைச் சரியான கண்காணிப்பு செய்வதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் காசு வாங்கிக்கொண்டு மருத்துவ அதிகாரிகள் காப்பாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.