Published:Updated:

டார்ஜிலிங்கில் தொடரும் போராட்டம்! போலீஸார் மீது கல்வீச்சு

சண்முகபாண்டியன்.தே
டார்ஜிலிங்கில் தொடரும் போராட்டம்! போலீஸார் மீது கல்வீச்சு
டார்ஜிலிங்கில் தொடரும் போராட்டம்! போலீஸார் மீது கல்வீச்சு

டார்ஜிலிங்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதால், போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர். கூர்க்கா இன மக்கள் தனி மாநில உரிமை கேட்டுப் போராடிவருகின்றனர். இதனிடையே இன்று காலை போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் வில், அம்பு, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து போராட்டக்காரர்கள் காவல்துறையினர்மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். மேலும், வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்தன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 8-ஆம் தேதி, போராட்டக்காரர்கள்மீது போலீஸ் தடியடி நடத்தியதையடுத்து, காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.