Published:Updated:

மனைவியை எரியும் விறகுக்கட்டையால் அடித்து, ஆசிட் ஊற்றி தாக்கிய கணவர்

ஆர். ஜெயலெட்சுமி
மனைவியை எரியும் விறகுக்கட்டையால் அடித்து, ஆசிட் ஊற்றி தாக்கிய கணவர்
மனைவியை எரியும் விறகுக்கட்டையால் அடித்து, ஆசிட் ஊற்றி தாக்கிய கணவர்

கேரளாவில் வரதட்சணைக் கேட்டு, கணவரே மனைவியை விறகு கட்டையால் தாக்கி, அவர்மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்லம் ஆழப்புழா மாவட்டத்தில் வரதட்சணைக் கேட்டு மனைவியைக் கொடூரமாக விறகுக்கட்டையால் அவரது கணவர் தாக்கியுள்ளார், மேலும், தனது மனைவிமீது அவர் ஆசிட்டையும் ஊற்றியுள்ளார்.  ஜூன் 6 ஆம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் கூடுதல் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியுள்ளனார். ஆத்திரத்தில் எரிந்துகொண்டிருந்த விறகுக்கட்டையால் மனைவியைப் பலமாகக் கணவர் தாக்கியுள்ளார்.

இதில் துடி, துடித்து கீழே விழுந்த மனைவியின் மீது, ஆத்திரத்தில் கணவர் ஆசிட்டை எடுத்து ஊற்றியுள்ளார். சற்று சுதாரித்த மனைவி முகத்தை திருப்பிக் கொண்டதால் ஆசிட் காது மற்றும் கழுத்துப் பகுதியில் சென்று பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் மனைவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மனைவி அளித்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை தலைமறைவான கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.