Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடக் டிஜிட்டல் கேமரா முதல் ட்விட்டர் பீக் வரை... தோல்வியடைந்த சாதனங்களின் கதை! #MuseumOfFailure

தோல்விகளின் அருங்காட்சியகம், ஸ்வீடன்

ப்பிளும் நியூட்டனும் இணைந்த கூட்டணிதான் இந்த உலகிற்கு புவியீர்ப்பு விசை என்ற தத்துவத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அதே ஆப்பிளும் நியூட்டனும் இணைந்த மற்றொரு கூட்டணி இதேபோல வெற்றி பெற்றுவிடவில்லை. மேலே முதலில் நான் குறிப்பிட்டது விஞ்ஞானி நியூட்டனையும், அவர் அருகில் கீழே விழுந்த ஆப்பிளும். இரண்டாவதாக நான் குறிப்பிட்டது ஆப்பிள் நிறுவனத்தின் பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ஆன நியூட்டன் மெசேஜ் பாட்  சீரிஸ் பற்றி. ஜான் ஸ்கல்லி ஆப்பிளின் சி.இ.ஓ.,வாக இருந்த சமயத்தில் வெளியிடப்பட்ட கேட்ஜெட் இந்த 'நியூட்டன் சீரிஸ் மெசேஜ் பாட்கள் '. பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் எனப்படும் PDA கேட்ஜெட்டாக மார்க்கெட்டிற்கு வந்த நியூட்டன் மக்களிடையே போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. புதியதொரு விஷயமாக பார்க்கப்பட்டாலும் கூட, அதிகமான விலை, சில தொழில்நுட்ப குறைபாடுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட நியூட்டனின் வெற்றிவாய்ப்பு வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில் 1998-ல் ஸ்டீவ்ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாகப் பொறுப்பேற்றார். அப்போது 'நியூட்டன்' திட்டத்தை முழுமையாகக் கைவிட்டார் ஜாப்ஸ். டச் ஸ்க்ரீன், மெசேஜிங் ஆப்ஷன், ஸ்டைலஸ் வசதி என வழக்கம்போல ஆப்பிளின் அட்வான்ஸ்டு கேட்ஜெட் ஆக இருந்தும்கூட தோல்வியில் முடிந்தது நியூட்டன் மெசேஜ் பாட் சீரிஸ். ஆப்பிள் போன்ற பெரிய டெக் நிறுவனத்தில் ஒரே ஒரு புராடக்ட் தோல்வி அடைவது என்பது சாதாரண விஷயம். ஆனால் அந்த ஒரு தோல்விக்குப் பின்னர் இருக்கும் காரணங்களும், அது அந்தக் காலத்தில் ஏற்படுத்திய தாகங்களும்தான் மிக முக்கியமானவை. பல வெற்றிகளுக்கு பாலபாடமாக அமைவது அதற்கு முன்னர் ஏற்பட்ட தோல்விகளாகவே இருக்கும். இந்த தத்துவத்தை அப்படியே ஒரு கான்செப்ட் ஆக மாற்றி, "தோல்விகளின் அருங்காட்சியகம்" என்றொரு அருங்காட்சியகத்தை ஸ்வீடனில் நடத்தி வருகிறார்கள் சாமுவேல் வெஸ்ட் மற்றும் அவரது குழுவினர்.

சாமுவேல் வெஸ்ட்

நியூட்டன் மெசேஜ் பாட் சீரிஸ் உள்பட, உலகின் பல நிறுவனங்களின் தோல்வியடைந்த புதுமையான பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. செல்போன்களின் ஜாம்பவான் ஆன நோக்கியா வெளியிட்ட கேமிங் மற்றும் மொபைல் டிவைஸ் ஆன நோக்கியா N-Gage, பெரும் பரபரப்புகளுக்கு இடையே வெளியான கூகுள் கிளாஸ், கோககோலாவின் காபி சுவையுள்ள சோடா, ட்விட்டர் பயன்படுத்த மட்டுமே உருவாக்கப்பட்ட  ட்விட்டர் பீக், கோடக் டிஜிட்டல் கேமரா, ஹார்லி டேவிட்சன் பெர்ஃபியூம் என இந்த அருங்காட்சியகம் முழுவதுமே பார்க்கவும், வியக்கவும் பல பொருள்கள் இருக்கின்றன.

"இன்னோவேஷன் என்பது கொஞ்சம் ஆபத்தான ஒரு பிசினஸ். காரணம் அது பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும். அப்படிப்பட்ட தோல்விகளின் அணிவகுப்புதான் இந்த அருங்காட்சியகம். இங்கே வரும் பார்வையாளர்கள் இரண்டு செய்திகளை இங்கிருந்து எடுத்துச் செல்வார்கள். முதலாவது வெற்றியிலிருந்து தோல்வியை தனியே பிரித்துப் பார்க்கமுடியாது என்பது. அடுத்தது தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கான தேவை பற்றியது" என்கிறார் வெஸ்ட். 

நியூட்டன் மெசேஜ் பாட்

அவர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. கூகுள் கிளாஸ் அறிமுகமான போது, மிகப்பெரிய புரட்சிகளுக்கு எல்லாம் வித்திடக்கூடிய ஒரு கேட்ஜெட் ஆக பார்க்கப்பட்டது. ஆனால் பல பிரச்னைகளால் சத்தமே இன்றி முடங்கிவிட்டது கூகுள் கிளாஸ். ஆனால் அந்த கிளாஸ் சந்தித்த ஒவ்வொரு பிரச்னையும் கூகுளுக்கு ஒரு பாடமே! தோல்விகள் பற்றி வெஸ்ட் கூறும்போது, "தோல்விகள் ஒவ்வொன்றும் வேடிக்கையானவை. புதுமையான கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக தோல்வியடைவதில்லை. சில கண்டுபிடிப்புகள் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடையும். சில பொருள்கள் தயாரிக்கும்போது தோல்வியடையும். இவை அனைத்தையும் தாண்டி ஒரு கண்டுபிடிப்பு சந்தைக்கு வந்தால் , அங்கேயும் கூட தோல்வியடையலாம். சில நிறுவனங்கள் பொருள்களின் கண்டுபிடிப்பில் புதுமைகள் செய்திருக்கும். ஆனால் விற்பனையில் பழைய முறைகளைப் பின்பற்றுவார்கள். இப்படிப் பலவிதங்களில் நிறுவனங்களுக்குத் தோல்வி ஏற்படுகிறது. தோல்விகளை யாரும் விரும்பமாட்டார்கள்தான். ஆனால் அவற்றை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து பாடங்களை நாம் கற்றுக்கொண்டால் அதுதான் வெற்றிகளுக்கு வழிவகுக்கும்" என தம்ப்ஸ்அப் காட்டுகிறார். 

இப்படித்தான்.... ஆப்பிள், கூகுள், அமேசான், கோக் போன்ற பெருநிறுவனங்களே கூட பலமுறை தோற்றிருக்கின்றன. ஆனால் இன்று அவற்றின் வெற்றிகளைத்தான் உலகம் கொண்டாடிக்கொண்டிருகிறது. "சிறுவயதில் நான் ஓர் உண்மையைக் கண்டுகொண்டேன். நான் செய்யும் 10 விஷயங்களில், எப்படியும் 9 விஷயங்கள் தோல்வியில்தான் முடிகின்றன என்று! எனவே 10 விஷயங்களும் வெற்றிபெற நான் இன்னும் பத்து மடங்கு அதிகமாக உழைக்கிறேன்" என்பார் பெர்னாட்ஷா. எத்தனை கோலிவுட் ஹீரோக்கள், எத்தனை இன்ட்ரோ சாங்கில் இதையே மாற்றி மாற்றி சொன்னாலும் சரி! வெற்றியின் சக்சஸ் ஃபார்முலா ஒன்றுதான். அதுதான் தோல்வி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement