Published:Updated:

'சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு உரிமை விற்பனையானது!

'சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு உரிமை விற்பனையானது!
'சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு உரிமை விற்பனையானது!

நகைச்சுவை  கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானம் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். 2014ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்துக்குப்பிறகு ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவர் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’.

'சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு உரிமை விற்பனையானது!

ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம் உணவையும் சமையலையும் பற்றிய கதை.  இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் தெலுங்கு உரிமத்தை ‘லிங்க பைரவி கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் கெனன்யா ஃபிலிம்ஸ் ஜெ.செல்வகுமார் கூறுகையில், ‘மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட போகும் இப்படம் சந்தானத்தின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.