Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்க காலேஜ் நாள்களை மிஸ் பண்றீங்களா? அப்போ இதைப் படிங்க!

ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் 'ஐ மிஸ் மை காலேஜ் லைஃப்', 'என் கல்லூரி வாழ்க்கையை நான் மிஸ் செய்கிறேன்', 'அது ஒரு கனாக் காலம்', 'என் கல்லூரி ஒரு சொர்க்கம்'னு ஃபீலிங் ஸ்டேட்டஸாக தட்டி டார்ச்சர் செய்பவர்களா நீங்கள்? உண்மையில் கல்லூரி வாழ்க்கையை மிஸ் செய்கிறேன் என கலங்கக்கூடாது, சந்தோஷப்படணும். ஏன் தெரியுமா?

காலேஜ்

காலாங்காத்தாலேயே எழுந்திரிச்சு காலேஜுக்குப் புறப்படனும். நம்மில் பலபேருக்கு இரவு முழுதும் வராத தூக்கம் காலையில் எழுந்த பிறகுதான் வரும். கொடுமை..

தினமும், ஷூ, ஐ.டி கார்டு, பெல்ட், டை என அனைத்தையும் அள்ளி போட்டு சென்றால் மட்டுமே கல்லூரிக்குள் கால் வைக்க முடியும், இல்லையேல் 'டாட்டா' காட்டி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். மொதல்ல, க்ளாஸுக்கு ஒட்டடை அடிங்கய்யா!

சில லெக்சரர்கள் பாடம் எடுக்கிறேன் எனக் குழப்பி கும்மி அடிப்பார்கள், சிலர் தூங்க வைப்பார்கள், சிலர் குண்டலினியை கிளப்புவார்கள். ஒரு சிலர் மட்டுமே நம் செடிமண்டையில் புரியும் வகையில் பாடம் நடத்துவார்கள். அதையும் நம்முடன் படிக்கும் பக்கிகள் கவனிக்காமல், அவர்களை கலாய்த்து கதறவிடுவார்கள். இறுதி வரை புத்தகத்தில் இருக்கும் விஷயத்தை புரிந்து படித்திருக்கவே மாட்டோம், மனசு கிடந்து குத்தும்.

'அசைன்மென்ட்' கொடுத்தே கொல்லுவார்கள். 'பிராக்டிக்கல் நோட்டில் கையெழுத்து போடுவதற்குள் 'கோடு போட்டு வா, பேஜ் நம்பர் போட்டு வா, இன்டெக்ஸ் எழுதிட்டு வா' என சுத்தவிட்டு சுண்ணாம்பு அடிப்பார்கள்.

எல்லாவற்றையும் கச்சிதமாய் முடித்துவிட்டு நோட்டை நீட்டினால், 'லஞ்ச்சுக்கு முன்னாடி ஸ்டாஃப் ரூமுக்கு வா... கையெழுத்து போட்டுத் தர்றேன்' என்பார்கள். அங்கே சென்றால், நோட்டை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, நம் கையில் காசை கொடுத்து 'கொத்தமல்லி சாதம் வாங்கிட்டு வா' என கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். இடையிடையில் பென்ச் வேறு தூக்க சொல்வார்கள். ஹய்யோ...

காலேஜ்

காலேஜ் கிரவுண்டில் விளையாடியதை விட, வேறு டிபார்ட்மென்ட் பயபுள்ளைக கூட சண்டைதான் அதிகம் போட்டிருப்போம். வீட்டுக்குப் போகும்போதும், கல்லூரிக்கு வரும்போதும், சாவுபயத்தில் முகத்தை கர்சீஃபால் மூடிக் கொண்டு தலைமறைவோடு திரிந்திருப்போம்.

அதிலும் ஹாஸ்டலில் தங்கி படித்த மாணவர்கள்தான் ரொம்பவே பாவம். ஆனால், அனைத்தையும் மறந்து விட்டு ' ஹாஸ்டல் லைஃப், ஹேப்பி லைஃப்' என்பார்கள். ஹாஸ்டல் ரூம், லாக் அப்பை விட கேவலமாக இருக்கும். ஹாஸ்டல் மெஸ் சமையல்காரருக்கு மட்டும்தான் தெரியும் அவர் சமைத்தது வெண்பொங்கலா, உப்புமாவா என்று. வீட்டு சாப்பாடு சாப்பிட்டு அர்னால்டு மாதிரி இருந்தவர்கள் கூட, ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு 'அனிருத்' மாதிரி ஆகி விடுவார்கள்.

ஹாஸ்டலில் இரவு நிம்மதியாய் தூங்க விட மாட்டார்கள், எவனாவது கண்டிப்பாக விடிய விடிய ட்யூப் லைட்டைப் போட்டு விட்டு படித்துக்கொண்டிருப்பான். அதிலும் சில விஷ ஜந்துகள் ரூம் கதவை தட்டிவிட்டு ஓடி விடுவார்கள். அடேய்... யாருடா நீங்க?

பேனா, பென்சில், ரப்பரிலிருந்து கால்குலேட்டர் வரை அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆட்டையைப் போடுவார்கள். இன்னும் வினோதமாக 'டிபன் பாக்ஸை' இன்டர்வெல்லின் போதே ஆட்டையைப் போட்டுக் காலி செய்து விடுவார்கள். சாப்பாட்டு வேளையில் பாக்ஸை திறந்து பார்த்தால், நம் முகம் தெரியும் அளவுக்கு 'பளிச்' என இருக்கும்.

க்ளாஸில் நிறைய விசித்திர கேரக்டர்கள் இருக்கும், அத்தனையையும் சமாளிப்பதற்குள் 'வாரணாசிக்கு சன்னியாசம் போய்விடலாமா?' என யோசிக்கும் அளவிற்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். இவை எல்லாவற்றுக்கும் மேல், தொட்டதற்கெல்லாம் ஃபீஸ் வசூலித்து ஃபியூஸ் பிடுங்குவார்கள்.

இப்போ சொல்லுங்க, கல்லூரி வாழ்க்கை சொர்க்கமா? அது ஒரு கனாக்காலமா?  ஓவர் ஃபீலிங் உடம்புக்கு ஆகாது பாஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement