Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசியலின் சிறந்த காமெடி ஜோடி அவார்ட் இவங்களுக்குத்தான்!

கவுண்டமணி - செந்தில், சிவகார்த்திகேயன் - சூரி, வடிவேலு - சிங்கமுத்து போன்ற காமெடி ஜோடிகள் எல்லாம் ரீல் வாழ்க்கையில்தான். ரியல் வாழ்க்கையில் அவர்களை மிஞ்சும் காமெடி இரட்டையர்கள் எல்லாம் அரசியலில் இருக்கிறார்கள். சீரியஸாய் காமெடி பண்ணும் இவர்கள் இல்லாவிட்டால் தமிழக அரசியல் செம் லீவில் வெறிச்சோடிய ஹாஸ்டல் மெஸ் போல வறண்டுவிடும். அப்படி நம்மை சிரிப்பு மோடிலேயே வைத்திருக்கும் காமெடி ஜோடி இவர்கள்தான்!

ஓ.பி.எஸ் - நாஞ்சில் சம்பத்:

காமெடி

ஓ.பி.எஸ்ஸுக்கு பேச்சு வரும் என்பதே போன பிப்ரவரி மாதம்தான் தெரியவந்தது. அதற்குள் அவருக்கு அவ்வளவு எதிரிகள். அதில் முக்கியமானவர் நாஞ்சில் சம்பத். ஓ.பி.எஸ் பேசும் ஒவ்வொரு ஸ்டேட்மென்ட்டுக்கும் ரிவீட் அடிப்பது சம்பத் ஸ்டைல். இத்தனைக்கும் சம்பத்தே சின்னம்மா தரப்பு அடித்த ரிவீட்டில்தான் சரண்டரானார். அந்தப் பயம் காரணமாகவே மைக்கை பிடிக்கும்போதெல்லாம் ஓ.பி.எஸ்ஸை வெளுக்கிறார். 'வரலாற்றுத் துரோகி', 'சரித்திரத்தின் கறுப்புப் பக்கம்' போன்ற அடைமொழிகள் வேறு. சும்மாவா? வளர்ந்த இடம் அப்படி!

ஈ.வி.கே.எஸ் - திருநாவுக்கரசர்:

காமெடி

தமிழக காங்கிரஸ் சீரியஸான கட்சி என்பதை டெல்லி மேலிடம் தவிர வேறு யாருமே நம்பத் தயாரில்லை. இந்த லட்சணத்தில் கோஷ்டி சண்டைகள் வேறு. திருநாவுக்கரசரின் அ.தி.மு.க பாசம் ஆல் ஓவர் உலகத்துக்கே தெரியும். சும்மா இருப்பாரா ஈ.வி.கே.எஸ்? 'ஆமா, திருநாவுக்கரசர்ன்னா யாரு? பிரிட்டிஷ் பிரதமரா?' என்கிற ரேஞ்சுக்கு கலாய்த்தார். இப்படி இருவரும் மாறி மாறி முட்டிக்கொள்ள, இந்த பஞ்சாயத்தில் தங்கபாலு, சிதம்பரம் கோஷ்டி எல்லாம் பாயின்ட் வரட்டும் பாயின்ட் வரட்டும் எனக் காத்திருக்கிறார்கள்.

ஹெச்.ராஜா - பொன்.ராதாகிருஷ்ணன்:

காமெடி

காங்கிரஸிலாவது கோஷ்டி சண்டைதான். பா.ஜ.க அதற்கும் ஒரு படி மேலே. கோஷ்டி சேருமளவிற்கு தமிழக பா.ஜ.கவில் ஆள் இல்லாததால் தலைவர்களே மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். சென்னை தலைமை அலுவலகத்தில் தமிழிசை, டி.வி ஷோக்களில் வானதி, சிவகங்கையில் ஹெச்.ராஜா, ஏர்போர்ட்டில் பொன்னார் என ஏரியா பிரித்து, 'வா வா இப்ப வா' என வம்பிழுத்துக்கொள்கிறார்கள். அதில் பொன்னார் வேலைதான் இருப்பதிலேயே சிரமம். ஹெச்.ராஜா சொல்லும் லாஜிக் இல்லாத குபீர் கருத்துகளுக்கு எல்லாம் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, 'அம்மா சத்தியமா அது அவர் சொந்தக் கருத்துங்க' என சொல்லவேண்டும். எவ்வளவு?

வைகோ - தா.பாண்டியன்:

காமெடி

இதற்கு முன்னர் பார்த்த காமெடி இணை எல்லாம் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த இணையில் இருக்கும் இருவருமே மாற்றுக் கட்சி மாண்பாளர்கள். வைகோவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். முதல் நாள் போட்டி என்பார், மறுநாள் இல்லை என்பார். தேர்தலுக்கு முன் வெற்றி என்பார், தோற்ற பின் இது எதிர்பார்த்ததுதான் என்பார். தா.பா வேற ரகம். நாஞ்சில் சம்பத், ஆவடி குமார் போன்றவர்களுக்கே பயம் வரவைக்கும் அம்மா விசுவாசி. இந்த இணை இல்லையென்றால் சோஷியல் மீடியாக்களில் அரசியல் ஸ்டேட்டஸ்களே இல்லை.

தீபா - மாதவன்:

காமெடி

இதுவரை பார்த்த பிரமுகர்கள் எல்லாரும் குறைந்தது 20 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்கள். ஆனால், தீபா யாரென சில மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் கூகுளே குழம்பித் தவித்திருக்கும். ஐந்தே மாதங்களில் முதல்வர் வேட்பாளர்  ஆவதெப்படி? என தீபா கோச்சிங் சென்டரே நடத்தலாம். போதாக்குறைக்கு அவரின் கணவர் மாதவன் தனி ட்ராக் ஓட்டிக்கொண்டிருக்கிறார். 'ஆளே இல்லாமல் அரசியல் கட்சி நடத்துவது எப்படி?' என அவரும் சென்டர் நடத்தலாம். சந்தேகமே இல்லை, தமிழக அரசியலின் சிறந்த காம்டி ஜோடி விருது இவர்களுக்குத்தான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement