புதுச்சேரி முதல்வரின் காரில் தேசியக்கொடியைத் தலைகீழாகப் பொருத்திய ஓட்டுநர் இப்ராஹிம், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இன்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரது காரைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர், அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கார்களும் பின்னால் வந்தன. அப்போது, அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த தேசியக்கொடி தலைகீழாக இருந்தது. இதையடுத்து கொடி அகற்றப்பட்டு, பின்னர் சரியாகப் பொருத்தப்பட்டது. இந்தச் சம்பவம், சென்னை விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில்,முதலமைச்சர் நாராயணசாமியின் கார் ஓட்டுநர் இப்ராஹிம், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism