Published:Updated:

உபெர் சி.இ.ஓ பதவியிலிருந்து விலகினார் டிராவிஸ்! பதவி விலகலுக்கு இதுதான் காரணம்!

உபெர் சி.இ.ஓ பதவியிலிருந்து விலகினார் டிராவிஸ்! பதவி விலகலுக்கு இதுதான் காரணம்!
உபெர் சி.இ.ஓ பதவியிலிருந்து விலகினார் டிராவிஸ்! பதவி விலகலுக்கு இதுதான் காரணம்!

உலகின் முன்னணி கால் டாக்சி நிறுவனம் உபெர். இதன் துணை நிறுவனர் டிராவிஸ் காலாநிக் (Travis Kalanick), சி.இ.ஓ பதவியையும் சேர்த்து வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் அந்தப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

'தனிப்பட்ட பிரச்னைகளில் சிக்கியிருக்கும் டிராவிஸ், உபெர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலிருந்து விலகுவதுதான் சரியான முடிவாக இருக்கும்' என அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் வற்புறுத்தினர். இதனையடுத்து, முதலீட்டாளர்களுடன் கலந்தாலோசித்த பின், டிராவிஸ் தான் வகித்துவந்த சி.இ.ஓ பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் விபத்து ஒன்றில் டிராவிஸின் தாய் மரணமடைந்தார். அதையடுத்து, சொந்தக் காரணங்களுக்காக முன்தேதி அறிவிக்கப்படாத நீண்டகால விடுப்பில் செல்வதாக டிராவிஸ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"என் தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான சூழ்நிலை நிலவும் இந்நேரத்தில், முதலீட்டாளர்களின் பரிந்துரையை ஏற்று நான் பதவி விலகுவதுதான் சரியாக இருக்கும். இதனால் உபெர் நிறுவனம் மேலும் ஒரு சண்டையினால் தடுமாறுவதற்கு மாறாக, பழையபடி முன்னேற்றத்தை நோக்கிச்செல்லும்" என டிராவிஸ் தனது பதவி விலகல் குறித்துத் தெரிவித்துள்ளார். சி.இ.ஓ பதவியிலிருந்து விலகியபோதும், உபெர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் டிராவிஸ் இடம் வகிப்பார் என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.