Published:Updated:

ரிபப்ளிக் சேனலுக்கு எதிராக சு.ப.உதயகுமார் பிரஸ் கவுன்சிலில் புகார்!

ரிபப்ளிக் சேனலுக்கு எதிராக சு.ப.உதயகுமார் பிரஸ் கவுன்சிலில் புகார்!
ரிபப்ளிக் சேனலுக்கு எதிராக சு.ப.உதயகுமார் பிரஸ் கவுன்சிலில் புகார்!

ரிபப்ளிக் சேனலுக்கு எதிராக சு.ப.உதயகுமார் பிரஸ் கவுன்சிலில் புகார்!

தன் மீது போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி செய்தி வெளியிட்ட 'ரிபப்ளிக் தொலைக்காட்சி' மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் புகார் அளித்துள்ளார். 


அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுப.உதயகுமாரன் பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார் என்பது போன்று ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. 'ஸ்டிங் ஆப்ரேஷன்' என்று உதயகுமார் பேசும் வீடியோவையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள உதயகுமார், அந்த சேனல் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடம் புகார் அளித்துள்ளார். அவருடைய புகார் கடிதத்தில், 'ஏப்ரல் 8-ம் தேதி, 'ஸ்வேதா ஷர்மா மற்றும் சஞ்சிவ் என்பவர்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தனர். தன்னை லண்டனில் படிக்கும் ஆய்வு மாணவி என்று ஸ்வேதா அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர், தனது ஆய்வு குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்.

நான் அவருக்கு நிறைய புத்தகங்கள் கொடுத்தேன். மறுநாள் மீண்டும் என்னை சந்தித்த அவர், லண்டனைச் சேர்ந்த அவருடைய பேராசிரியர் என்னுடைய போராட்டத்துக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார். எனக்கு வெளிநாட்டவர்கள் பணம் அளிக்க முடியாது. வேண்டுமென்றால், இந்தியாவிலுள்ள உங்கள் உறவினர்கள் மூலமாக எனது கட்சிக்கு நிதியாக அளிக்கலாம். நான் அதற்குரிய ரசீதுகள் அளித்துவிடுவேன். வெளிநாட்டினர் பணம் தருவதை நான் விரும்பவில்லை என்று ஸ்வேதாவிடம் கூறினேன். இந்த உரையாடல் ரிபப்ளிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த விவகாரம் தொடர்பாக ஜூன் 20-ம் தேதி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டு விளக்கம் அளித்தேன்.

ஆனால், அர்ணாப் கோஸ்வாமி அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டார். மேலும் அதே நேரத்தில், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிருபர் சஞ்சிவ் நாகர்கோவிலிலுள்ள எனது வீட்டின் முன் இருந்தார். அவர், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கச் சொல்லி
80 வயதைக் கடந்த எனது பெற்றோர்களைத் தொந்தரவு செய்துள்ளார். இதேபோல மறுநாளும், எனது வீட்டின் முன் நின்று எனது பெற்றோர்களைத் தொந்தரவு செய்துள்ளார். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இத்தகையச் செயல்கள் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு எதிரான அந்தச் சேனலை தடை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு