Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#NotInMyName இந்த ஹேஷ்டேக் ஏன் ட்ரெண்ட் ஆகுது தெரியுமா?

சமூக வலைதளங்கள் மூலமாகப் போராட்டங்களை முன்னெடுக்கும் செயல் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக, மாட்டிறைச்சி தடை விவகாரத்துக்குப் பிறகு, 'திராவிட நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதில், திராவிட நாடு அமைக்கும் கருத்து முன் வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதலே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #NotInMyName என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

notinmyname


நாட்டில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆன்லைனில் மட்டுமல்ல, ஆஃப்லைனிலும் #NotInMyName போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம், சண்டிகர், அலஹாபாத், கொச்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெண்கள், இளைஞர்கள் #NotInMyName போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக, அமைதியான வழியில் போராடுவதே இதன் ஹைலைட்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், கனடா நாட்டின் டொரன்டோ போன்ற வெளிநாட்டு நகரங்களிலும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி - மதுரா ரயிலில் கடந்த வாரம் ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவனை, மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை எழுப்பியது. எனவே, இந்தச் சம்பவத்தை மையமாக வைத்தும் #NotInMyName ஹேஷ்டேக் காட்டுத் தீயாக பரவிவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement