Published:Updated:

நயன்தாராவின் 'அறம்’ படத்துக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் நெட்வொர்க்

சுஜிதா சென்
நயன்தாராவின் 'அறம்’ படத்துக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் நெட்வொர்க்
நயன்தாராவின் 'அறம்’ படத்துக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் நெட்வொர்க்

கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'அறம்' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் நெட்வொர்க் வாங்கியுள்ளது.

'திங்க் மியூசிக்' நிறுவனம் இந்தப் படத்துக்கான இசை உரிமத்தையும் வாங்கியுள்ள இந்நிலையில், இதற்கான அதிகாரபூர்வமான தகவல் தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோவிடமிருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் ரோலில் நடித்துள்ளார். மேலும், சோனு லட்சுமி மற்றும் இராமச்சந்திரன் துரைராஜ் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காக்க முட்டை படத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்த ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் இந்தப் படத்திலும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' மற்றும் டீசர் சென்ற ஆண்டு நவம்பர் 18-ம் தேதி, நயன்தாராவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் ஆதரவை ஈட்டியது. அறம் படத்துக்கான படப்பிடிப்பு முடிந்த இந்நிலையில், விரைவில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.