வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (03/07/2017)

கடைசி தொடர்பு:10:46 (04/07/2017)

பிஎம்டபிள்யூவின் 50 லட்ச 5 சீரிஸ் காரில் என்ன ஸ்பெஷல்? #allnewBMW5Series

 

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

 

Sport Line - Luxury Line - M-Sport எனும் 3 வேரியன்ட்கள் மற்றும் 8 நிறங்களில், 49.90 - 61.30 லட்சத்தில் (ஜி.எஸ்.டிக்குப் பிறகான எக்ஸ்ஷோரூம் விலை), புதிய 5 சீரிஸ் லக்ஸூரி செடானை அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது, ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ. இதில் 1 பெட்ரோல் மற்றும் 2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. Aero Kit, Sports Transmission, அகலமான 275/40 R18 டயர்கள் போன்ற ஸ்பெஷலான விஷயங்கள், இந்த லக்ஸூரி செடானின் 530d M Sport எனும் டாப் வேரியன்ட்டில் கிடைக்கின்றன. இன்ஜின் விபரங்களின்படி பார்த்தால், காரின் அதிக மைலேஜிற்கு, அதன் 0.22 Drag Co-Efficient உதவிகரமாக இருக்கிறது. மேலும் 3 வேரியன்ட்டிலும், ஒவ்வொரு வீலுக்கும் பிரத்யேகமான Damping வசதியுடன் கூடிய Adaptive Suspension & எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள், வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ். முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்ப ரீதியில் 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பலமடங்கு முன்னேறியிருப்பது, நீளமான சிறப்பம்சங்களின் பட்டியலைப் பார்க்கும்போதே தெரிகிறது. Ebony & Beige கலர் டேஷ்போர்டில், Wood - Piano Black - லெதர் ஃப்னிஷ் செய்யப்பட்டுள்ளது.

 

bmw 5 series

 

தவிர கேபினிலும் முன்பைவிடப் பொருட்களை வைப்பதற்கு, அதிகப்படியான ஸ்டோரேஸ் ஸ்பேஸ் இருக்கிறது; பூட் ஸ்பேஸும் 530 லிட்டராக அதிகரித்திருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் Cluster Architecture ஃப்ளாட்ஃபார்மில், புதிய 5 சீரிஸ் கார் தயாரிக்கப்படுகிறது. எனவே முந்தைய தலைமுறை மாடலைவிடக் காரின் அளவுகளில் முன்னேற்றம் இருந்தாலும் (36மிமீ அதிக நீளம், 6 மிமீ அதிக அகலம், 2மிமீ அதிக உயரம், 7 மிமீ அதிக வீல்பேஸ், புதிய 18 இன்ச் அலாய் வீல்), பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ், அதனைவிடச் சுமார் 70 - 100 கிலோ வரை எடை குறைவானதாக மாறியிருக்கிறது. மேலும் காரின் கட்டுமானத்தில் அலுமினியம் - High Strength ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில், இந்நிறுவனத்தின் டாப் செடான் காரான 7 சீரிஸின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சூப்பர் டிசைன், பிரிமியம் கேபின், ஸ்போர்ட்டி ஓட்டுதல் ஆகியவற்றை முன்னிருத்தி, தனது 2017 5 சீரிஸ் லக்ஸூரி செடானை, மினி 7 சீரிஸ் போல பிஎம்டபிள்யூ வடிவமைத்திருப்பது புரிகிறது. CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுவதாலேயே, அட்டகாசமான விலையில் புதிய 5 சீரிஸ் காரைக் களமிறக்க, பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் முடிந்திருக்கிறது என்றே தெரிகிறது. 

 

bmw 5 சீரிஸ் cabin

போட்டியாளர்கள்: ஜாகுவார் XF, ஆடி A6, வால்வோ S90, மெர்சிடீஸ் பென்ஸ் E-class LWB 
530i Sport Line: 252bhp பவர் - 35kgm டார்க் - 15.56kmpl அராய் மைலேஜ் - 6.2 விநாடிகளில் 0 - 100கிமீ வேகத்தை எட்டக்கூடிய 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்  
520d Sport Line & 520d Luxury Line: 190bhp பவர் - 40kgm டார்க் - 22.48kmpl அராய் மைலேஜ் - 7.5 விநாடிகளில் 0 - 100கிமீ வேகத்தை எட்டக்கூடிய 2.0 லிட்டர்,  4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் 
530d M Sport: 256bhp பவர் - 62kgm டார்க் - 18.59kmpl அராய் மைலேஜ் - 5.7 விநாடிகளில் 0 - 100கிமீ வேகத்தை எட்டக்கூடிய 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின்
டிரைவ் செட்-அப் & கியர்பாக்ஸ்: ரியர் வீல் டிரைவ் மற்றும் Paddle Shifters உடனான 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

 

பிஎம்டபிள்யூ 5 series இன்ஜின்


பாதுகாப்பு வசதிகள்: ABS, DSC, DTC, CBC, HDC, ரன் ஃப்ளாட் டயர்கள், எமர்ஜென்சி ஸ்பேர் வீல், க்ராஷ் சென்சார், Electronic Vehicle Immobiliser, Side-Impact Protection
தொழில்நுட்ப வசதிகள்: Adaptive LED ஹெட்லைட் - டெயில் லைட், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், Gesture Control வசதியுடன் கூடிய 10.25 இன்ச் டிஸ்பிளே கொண்ட iDrive சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 360 Degree பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ரிமோட் பார்க்கிங், 600W Harman Kardon ஆடியோ சிஸ்டம், டூயல் எக்ஸாஸ்ட் பைப், Heads-Up டிஸ்பிளே, ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்-ஸ்டாப், ஆட்டோ பிரேக்கிங் உடனான க்ரூஸ் கன்ட்ரோல், Brake Energy Regeneration, Active Air Kidney க்ரில், Launch Control, டிரைவிங் மோடு (Comfort, Sport, Sport+, Eco Pro, Adaptive)

 

gst

 

2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்: ஜி.எஸ்.டிக்குப் பிறகான எக்ஸ் ஷோரூம் விலைகள் இதுதான்!

BMW 530i Sport Line: ரூ. 49.90 லட்சம்

BMW 520d Sport Line: ரூ. 49.90 லட்சம்

BMW 520d Luxury Line: ரூ. 53.60 லட்சம்

BMW 530d M Sport: ரூ. 61.30 லட்சம்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்