''தமிழக அரசின் பட்ஜெட்டில் தி.மு.க-வினருக்கு மகிழ்ச்சியான செய்தி எதுவும் உள்ளதா?''

''ஏன் இல்லாமல்? தமிழக சிறைச்சாலைகளின் மேம்பாட்டுக்காக

117 கோடி ஒதுக்கி இருக்கிறார்களே!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

'' 'கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அறங்காவலர் குழுவில் இருக்கக் கூடாது, ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. விடுத்துள்ள வேண்டுகோளை ஜெயலலிதா ஏற்று இருக்கிறாரே?''

''இந்து அறநிலையத் துறை என்கிற அமைப்பே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னணியில் இருந்தவர் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார்தான். கோயில் சொத்துக்களை ஒரு சாரார் அனுபவித்துக்கொண்டு இருந்ததைத் தடுத்து, அதை மக்கள் சொத்தாக மாற்றியது நீதிக் கட்சியின் சாதனை. அதேபோல் யார் கோயில்களுக்குள் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்டார்களோ,

அதே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை முதல் அற நிலையத் துறை அமைச்சராக ஆக்கியது இன்னொரு சாதனை. அறங்காவலர் குழுவிலோ, அறநிலையத் துறையிலோ பணிபுரிவதற்கு ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கோயில் சொத்துக்களை யாரும் கொள்ளை அடிக்காமல் கண்காணித்தாலே போதும். இதற்கும் உதாரணம் பெரியார்தான். பெரியாரின் அப்பா ஒரு பிள்ளையார் கோயிலை நிறுவி, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் தன் மகன் பெயரில் எழுதிவைத்து இருந்தார். கடவுள் மறுப்பைத் தீவிரமாகப் பிரசாரம் செய்துவந்தாலும், அந்தக் கோயில் பணிகள் எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கான செயல்பாடுகளைச் செய்து வந்தவர் பெரியார். திராவிட இயக்கத் தவரின் தியாகத்தாலும் போராட்டங்களாலும் ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதாவுக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லும் துணிச்சல் வாய்ந்தவர்கள் யாரும் அவர் அருகில் இல்லை என்பதுதான் அவலமானது!''

- தேன்மொழி, கம்பம்.

'' 'இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில்தான் அதிகம் செலவு செய்யப்பட்டது’ என்கிறாரே கருணாநிதி?''

''பிரதமருக்குக் கடிதங்கள் எழுதுவது அவ்வளவு செலவு வைக்கும் சமாசாரமா என்ன?''

- மு.பெரியசாமி, திருவாரூர்.

''தமிழகத்துக்கும் டெல்லிக்கும் என்ன வித்தியாசம்?''

''எதிர்க் கட்சியினர் ஜெயிலுக்குப் போனால், அது தமிழகம். ஆளும் கட்சியினரே சிறைக்குப் போனால், அது டெல்லி!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

'சமச்சீர்க் கல்வியில் படித்தால் கிளார்க் ஆகலாம், அப்துல் கலாம் ஆக முடியாது’ என்கிறாரே விஜயகாந்த்?''

''அதாவது, தனியார் பள்ளிகளில் படித்தால்தான் புத்திசாலி ஆகலாம் என்பது விஜயகாந்த்தின் வாதம். ஆனால், உண்மையில் அப்துல் கலாமே அரசுப் பள்ளியில் படித்தவர்தான். சினிமாவில் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக்குகளைஅள்ளித் தெளிக்க விஜயகாந்த்துக்கு வசனகர்த்தாக்கள் உதவினார்கள். அப்படி யாரையாவது விஜய காந்த் பக்கத்தில் வைத்துக்கொண்டால்தேவலை. இல்லை என்றால், அடிக்கடி கேப்டன் உளறிக்கொட்டி இப்படி ஓட்டைக் கப்பல்களை விட வேண்டியதுதான்!''

- மரகதம், சென்னை-17.

''கருணை மனுக்கள் நிராகரிப்பு...?''

''அப்சல் குருவுக்காகப் பேசுபவர்கள் பேரறிவாளனுக்காகப் பேசுவது இல்லை என்பதும் பேரறிவாளனுக்காகப் பேசுபவர்கள் அப்சலுக்காகப் பேசுவது இல்லை என்பதும்தான் கொடுமை. பேரறிவாளன் மீது 'சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு’ எல்லாம், பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கித் தந்தார் என்பதே.ஆனால், இறுதி வரை அந்த பெல்ட் பாமை யார் தயாரித்துக் கொடுத்தது என்பது மட்டும் விசாரணையில் 'கண்டுபிடிக்கப்படவில்லை’. அப்சல் விவகாரத்திலோ அவருக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன்வரவில்லை. அரசால் அப்சலுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரோ 'அப்சல் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அவரை விஷ ஊசி மூலம்தான் கொல்ல வேண்டும் என்று கோரிக்கைவைக்கிறார்’ என்று விசித்திரமாக வாதிட்டார். 'அப்சலின் ஆசனவாயில் பெட்ரோல் ஊற்றியும் மின் அதிர்ச்சிகள் கொடுத்தும்தான் வாக்குமூலம் பெற்றேன்!’ என்று சிறப்பு அதிரடிப்படையின் டி.எஸ்.பி. திராவிந்தர்சிங் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். '100 குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஆனால், ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக் கூடாது!’ என்கிற காந்தியின் வார்த்தைகளைச் சொல்வதைத் தவிர, வேறு என்ன இருக்கிறது?

- மால்கம், மதுரை.