Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிக் பாஸையே மிஞ்சும்லா... இன்ஜினீயரிங் காலேஜ் ஹாஸ்டல் அலப்பறை!

பிக் பாஸ்னு ஒரு நிகழ்ச்சி ஆரம்பிச்சதுதான் ஆரம்பிச்சாங்க... நல்லா இருக்கோ நல்லா இல்லையோ ரெண்டு வாரமா எங்க திரும்புனாலும் அந்தப் பேச்சுதான். இதுல வாட்ஸ் அப், ஃபேஸ்புக்ல எல்லாம் இன்னும் ஒரு படி மேலே மீம்ஸ், வீடியோ ட்ரோல்னு களை கட்டுது. ஒரு வாரமா காலேஜ் ஹாஸ்டல்ல வெளியுலகம் தெரியாம இருந்துட்டு வீக்கெண்ட் லீவுக்கு வீட்டுக்கு வந்தா இப்படி எங்கும் பிக் பாஸ் மயம். சரி இதுல அப்படி என்னதான் இருக்குனு பார்க்கலாம்னு ரொம்ப நாளா டிவியை மறந்த நான் டிவியை தூசு தட்டினேன்.

பிக் பாஸ்

பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே எனக்கு ஒரே சிரிப்பு! இதைத்தானே நம்ம பயலுகளோட நாலு வருஷமா பண்ணிட்டு இருக்கோம், இதுக்குத்தான் இந்த பில்டப்பானு ஒரு மைண்ட் வாய்ஸ்! அதுக்கு அப்புறம்தான் அந்த 15 பேருல இன்ஜினியரிங் ஸ்டூடன்ட்  ஒருத்தன் இருந்தா, அவன்தானே ஜெயிப்பான்னு தோணுச்சு. அதை நியாயப்படுத்தவே இந்தக் கடிதம். 

கமல் மாதிரி ஒரு நடுவர் கிடையாது!

எங்களைக் கண்காணிக்க கமல் மாதிரி ஜாலியான ஆள் யாரும் கிடையாது. காலேஜ்ல இருக்கிறதுலயே இரக்கமே இல்லாத ஸ்டாஃப் யாராவதுதான் வார்டனா வருவாங்க. 'யாரு எப்படா கேஸ்ல சிக்குவா'னு கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திகிட்டு தேடிகிட்டு இருப்பாங்க. ஏதாவது வம்புல மாட்டுனா அவ்வளவுதான். அந்த ஹாஸ்டலை விட்டு வெளியே போறவரை நம்மளை வச்சு செய்வாங்க. இவங்க கண்ணுல சிக்காம நாலு வருஷம் வாழ்றவன் எவ்வளவு பெரிய ஆளா இருக்கணும் பிக் பாஸ்?

ஸ்ட்ரிக்ட்லி பசங்க ஒன்லி: 

பிக் பாஸ்

பேருதான் கோ எட் காலேஜ். ஆனா உள்ளே நடக்கிறது வேற. பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் நடுவுல கண்ணுக்குத் தெரியாத கோடு ஒண்ணு எப்போதுமே இருக்கும். இதைத் தாண்டி ஒருத்தன் அவசரத்துக்கு ஒரு பொண்ணுகிட்ட பென்சில் கடனாக் கேட்டா கூட போதும், ஏதோ மிகப்பெரிய குற்றம் பண்ண மாதிரி விசாரணை வேற நடக்கும். ஆனா பிக் பாஸ்ல அத்தனை கேமராக்கள் முன்னாடியே காதலிக்கிறாங்க. இதெல்லாம் ஸ்ட்ரிக்ட்டான காலேஜைச் சேர்ந்த பையனோ பொண்ணோ நினைச்சுப் பார்க்கமுடியுமா?

மெஸ் அலப்பறைகள்:

என்னதான் பிக் பாஸ்ல சொந்தமா சமைச்சு சாப்பிடுறது ஒரு கஷ்டமான காரியமா இருந்தாலும் அதை விட கஷ்டமான விஷயமும் இருக்கு ப்ரோ! அது - ஹாஸ்டல் மெஸ் சாப்பாட்டைத் தினமும் சாப்பிடுறது. அந்தச் சாப்பாடுக்கு நாம 2 மினிட்ஸ் நூடுல்ஸ் சாப்பிட்டே உயிர் வாழ்ந்திடலாம்னு தோணும். இந்தக் கஷ்டம் வேற யாருக்காவது வருமா பிக் பாஸ்?

ரொமான்ஸ் ஏரியாவைக்கூட விடுங்க பாஸ்! ஹாஸ்டல் ஹாரர் அனுபவங்கள் எல்லாம் போட்டியாளர்களுக்கு உண்டா? 

பாதி நேரம் ஹாஸ்டலைப் பார்க்கவே பேய் பங்களா மாதிரிதான் இருக்கும். இது போதாதுனு ஓஜா போர்டு வச்சு பேயைக் கூப்பிடலாம்னு வேற நாலு பேரு திடீர்னு கிளம்பிருப்பாங்க. என்னதான் டுபாக்கூர்னு தெரிஞ்சாலும் அவங்ககூட ஓஜா போர்டுகிட்ட நிற்கும்போது ஒரு சின்ன நடுக்கம் இருக்கத்தான் செய்யும். அதுலயும் ஒரு காயினை வச்சுகிட்டு, 'நீ இங்க இருந்தா யெஸ்க்கு போ, இல்லைனா நோவுக்கு போ'னு (காயினை நகர்த்தலைன்னாலே நோ தானேய்யா! உங்க டீட்டெயில்ல தீயை வைக்க!) பேய்கிட்ட அவனுங்க டீலிங் பேசும்போது சிரிக்கவா அழவான்னு தெரியாம மனசு ஜென் நிலைல இருக்கும். 

இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் ஒரே ஒரு நல்ல விஷயமும் காலேஜ் ஹாஸ்டல்ல இருக்குதான். நாலு வருஷம் முடிஞ்சு வெளியே வர்றப்போ ஒரு பெரிய நட்பு வட்டமே உருவாகி இருக்கும். பிக் பாஸ் போட்டியாளர்கள் மாதிரி எல்லாத்துக்கும் அடிச்சுக்காம ஈகோ இல்லாம ஒத்துமையா இருக்குற கூட்டம் அது. அந்தக் கூட்டத்துக்காகவே எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கலாம்ய்யா!

இப்போ சொல்லுங்க பிக் பாஸ் இந்தப் போட்டியோட உண்மையான வின்னர் யாருன்னு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close