Published:Updated:

ராக்கிங்கால் குரலை இழந்த மாணவி!

Vikatan Correspondent
ராக்கிங்கால் குரலை இழந்த மாணவி!
ராக்கிங்கால் குரலை இழந்த மாணவி!
ராக்கிங்கால் குரலை இழந்த மாணவி!

விஜயநகரம்: ஆந்திர மாநிலத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிக்கு நடந்த ராகிங் கொடுமையால் அவர் தனது குரலை இழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கோட்லம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த போனி ஷாமிலி என்ற மாணவி, கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபோது மூத்த மாணவிகள் ராக்கிங் செய்துள்ளனர்.
அப்போது கயிறு மற்றும் ஹேர்பின்னால் கழுத்தை கீறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அம்மாணவி,விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,கயிறு மற்றும் ஹேர்பின்னால் கழுத்தை கீறியதால் ஷாமிலி குரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.