Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி, ஸ்டாலின், பன்னீர்செல்வம் - இவங்க எல்லாம் பார்ட் டைம் வேலை பாத்தா எப்படி இருக்கும்?

சுதந்திரம் கிடைச்சபிறகு, ரொம்ப சந்தோஷப்பட்ட நம்மை இப்ப இவங்க இருக்கறதுக்கு பேசாம அவங்களே இருந்திருக்கலாம்னு நினைக்குற அளவுக்கு மாத்திடுச்சு நம்ம அரசியல் நாயகர்களின் ஆக்டிவிட்டீஸ். இப்போ அரசியலில் இருக்கும் இவர்கள் வெவ்வேறு தொழில் செஞ்சிருந்தா எப்படி இருக்கும்னு நம்ம ஏழாம் அறிவுக்கு எட்டியதை வெச்சுக் கற்பனை செஞ்சு பார்த்தோம்... 

ஸ்டாலின் - மோடி

டூரிஸ்ட் கைடு மோடி :

நம்ம நாட்டின் பிரதமர் மோடி என்னதான் ஆரம்பத்தில் டீக்கடையில் வேலைபார்த்திருந்தாலும் இவர் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால் இவருக்கு டூரிஸ்ட் கைடு வேலை கணக்கச்சிதமாகப் பொருந்தும். காரணம், இவர் பதவியேற்று 3 வருடம் ஆகிய நிலையில் அரசு முறைப் பயணம் என்று சொல்லி 30 நாடுகளுக்கு மேல் டூர் போயிட்டார். நம்ம ஊர்ல மோடி இருந்தால்தான் அது அதிசயம். இன்னும் கொஞ்ச நாள்களில் அரசுமுறைப் பயணமாக மோடி இந்தியா வந்துள்ளார் என்று நியூஸ் சேனல்களில் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இவரு கூடவே போனா வேர்ல்டு டூர் போயிட்டு வந்துடலாம்...

யோகா மாஸ்டர் ஓ.பன்னீர்செல்வம் :

‘பார்த்தாலே பச்ச முகம்...`னு பாடுற அளவுக்கு அமைதியான நபர். கோவமே படமாட்டார். இவருக்கு ஏற்ற வேலை யோகா மாஸ்டர்தான். பார்க்கவே பவ்யமாக விபூதி குங்குமமிட்டு காதோரம் லைட்டா ஒயிட் கலர் விட்டு டை அடிச்சு அட்டகாசமா இருப்பார். கோவம் அல்லது வருத்தம் வந்தாலோ சண்டைக்குப் போகக்கூடாதுனு முடிவெடுத்து தியானம் பண்ண ஆரம்பிச்சிடுவார். இவருடைய ஸ்டூடன்ட்ஸ் எல்லோரையும் பொறுமைசாலிகளாக உருவாக்கிடுவார். கோவம் வந்தா இவரிடம் யோகா க்ளாஸ் போங்க ஜி..!

ஸ்டன்ட் மாஸ்டர் விஜயகாந்த் :

பார்க்கவே ரொம்ப டெரர். ஆனா இப்போ கொஞ்சம் வீக்கானது தெரிகிறது. ஆனா, பழைய ரெக்கார்டுலாம் எடுத்துப்பாரு... நான் யாருனு தெரியும் என மெர்சல் கொடுக்கிறார் கேப்டன். எத்தனை சண்டைகள், எத்தனை அடிகள், எத்தனை ரிவெஞ்சுகள் என இவரது ஆக்‌ஷன் பட்டியல் நீள்கிறது. இவரை யாராச்சும் மறுத்துப் பேசிட்டாங்கனா அவ்வளவுதான், கண்ணு சிவக்கும், கை முறுக்கும், ஷாக்குகே ஷாக் அடிக்கும். இவரு சினிமாவுல ஸ்டன்ட் மாஸ்டரா இருந்தா எத்தனை விருதுகள் வாங்கிருப்பாரோ..?

உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் :

இவர் சமீபமாகத்தான் இந்த அவதாரம் எடுத்திருக்கிறார். இவருக்குப் பிடித்த உடை டி-ஷர்ட், ட்ராக் பேன்ட், ஷூ தான். ரெண்டு பாக்கெட்லேயும் கையவிட்டு ஸ்டைலா நின்னாருனா பார்க்க அப்படியே பி.டி டீச்சராகப் பொருந்துவார். யாராவது இவருக்குச் சரியாக பதில் சொல்லலேன்னா உடனே அவங்களை க்ரவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லாம இவரே வெளியே போவதுதான் இவரது ஸ்பெஷல். `நமக்கு நாமே` என வருடத்துக்கு ஒருமுறை மாணவர்களுக்கு விழிப்புஉணர்வுப் பேரணி நடத்துவது இவர் வழக்கம். 

செல்லூர் ராஜூ - சீமான் - விஜயகாந்த் - ஓ.பி.எஸ்

தொழிலதிபர் வைகோ :

இவர் ஆரம்பத்தில் ஒரு தொழில் தொடங்கி நடத்துவார். அப்புறம், வேறு யாராவது தொழில் ஆரம்பிச்சா அவங்களைக் கூர்ந்து கவனிப்பார். அப்புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டு வியாபாரத்திற்கு ப்ளான் பண்ணுவார். போகப்போக அவரைக் கீழே தள்ளிவிட்டு பிஸினஸ்ல இவர் டாப்பிற்கு வர முயற்சிப்பார். கடைசிவரை இவரும் வரமாட்டார், மத்தவங்களையும் டாப்பிற்கு வர விடமாட்டார். ஆனால், ஆதிகாலம் முதல் பிஸினஸ் ஃபீல்டில் இருக்கிறார். நல்ல ஐடியாக்களை பாக்கெட்ல வெச்சுக்கிட்டே சுத்துவாரு. 

ஆர்.ஜே. சீமான் :

இவர் குரலுக்கும் பேச்சுக்கும் ஆர்.ஜே வேலை கச்சிதமாகப் பொருந்தும். `பேசணும்... உணர்ச்சி பொங்கப் பேசணும்` இதுதான் இவரின் கான்செப்ட். அன்புத் தமிழ் உறவுகளே... எனப் பேசி நிறைய ரசிகர்களைச் சம்பாதிச்சிடுவார். ``இளநீர் வித் சீமான்`` என ஷோவைத் தொகுத்து வழங்கி ஹிட் கொடுப்பார். என்ன பேசும்போது ஒரு குடம் தண்ணியைப் பக்கத்துல வெச்சுக்கணும். டி.வி பார்ப்பவர்களைத் தன் பேச்சினால் உணர்ச்சிகளைத் தூண்டி ரேடியோ பக்கம் இழுக்க ஃபுல் எஃபோர்ட் போடுவார்.

அப்பரசன்டீஸ் எடப்பாடி பழனிசாமி :

தன்னுடைய பாஸ் என்ன வேலை சொல்றாரோ அதை கரெக்டா செஞ்சு முடிச்சிடுவாரு. 'வேலை தருவேன் அந்தப் பொறுப்பில் இருந்து சம்பாதிக்குறதும், பதவியைக் காப்பாத்திக்கிறதும் உன் திறமை'னு எம்.டி-யிடமிருந்து ஆர்டர் வந்தால் அவ்வளவு டெடிகேஷனாக செய்வார். அதை எதிர்த்து யார் என்ன கேள்வி கேட்டாலும் கவலைப்படமாட்டார். `ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்.` இதுதான் இவரது தாரக மந்திரம். ஏதாவது வேலையைச் சிறப்பா முடிக்கணும்னா இவரை கான்டாக்ட் பண்ணலாம். 

சயின்டிஸ்ட்  செல்லூர் ராஜூ

இவர் செய்த செயல்களுக்கு சீனப் பத்திரிகைகள் வரைக்கும் பாராட்டுகள் குவிஞ்சது இவரோட லைஃப்டைம் சாதனை. ரொம்ப வெயில் அடிச்சா சூரியனை சிம்மில் வைப்பது, ரொம்ப மழை பெய்தால் தமிழ்நாடு முழுவதும் ரெயின் கோட் போடுவது போன்ற பல சிந்தனைகளோடு சுற்றிக்கொண்டிருப்பார். இவர் சிறந்த விஞ்ஞானியாக இந்தியா முழுதும் போற்றப்பட்டிருப்பார். பள்ளிப் பாடப்புத்தகத்தில் இவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றிருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close