Published:Updated:

கூட்டணி: காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவார் ’கெடு’!

Vikatan Correspondent
கூட்டணி: காங்கிரஸ் கட்சிக்கு  சரத் பவார் ’கெடு’!
கூட்டணி: காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவார் ’கெடு’!
கூட்டணி: காங்கிரஸ் கட்சிக்கு  சரத் பவார் ’கெடு’!

புதுடெல்லி: கூட்டணிக் கட்சிகளை முறையாக நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை  காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாவிட்டால்,ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி  விடுவோம் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி  அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்தபடியாக சரத் பவாருக்கு இரண்டாம் இடம்  அளிக்கப்படாதது, மகாராஷ்ட்ராவில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தங்களது  அமைச்சர்களுக்கு எதிராக காங்கிரஸ் முதல்வர் சவான் செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு  கருத்துவேறுபாடுகள் காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது  குறித்து,அக்கட்சி நேற்றும், இன்றும் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ்  கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்  பவார் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில்,கூட்டணிக் கட்சிகளை முறையாக நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை  காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாவிட்டால்,ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி  விடுவோம் என பவார் குறிப்பிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்த இறுதி முடிவு ஜூலை 26 ம்  தேதியன்று எடுக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.