Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் பாணியில் சின்னத்திரைத் தொகுப்பாளர்களாக தனுஷ், சிம்பு, சமுத்திரக்கனி - ஒரு ஜாலி ரைட்!

'கமல் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம்? அவர் ரேஞ்சுக்கு இதெல்லாம் பண்ணவே கூடாது' என பிக் பாஸின் முதல் எபிசோடில் இருந்தே குரல்கள் கேட்கின்றன. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூலாகத் தொகுத்து வழங்குகிறார் கமல். அவர் பாணியில் சில நடிகர்கள் சின்னத்திரைக்குத் தொகுத்து வழங்க வந்தால்...?

பொயட்டு தனுஷ்:

சின்னத்திரை

சிம்புதான் அடுத்த டி.ஆர் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். தனுஷ்தான் அடுத்த டி.ஆர் ஆவார் போல. கதை. திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், பாடகர் என ஒரே படத்தில் எக்கச்சக்க அவதாரங்கள் எடுக்கிறார். எனவே சூப்பர் சிங்கர், சூப்பர் டான்ஸர் வரிசையில் சூப்பர் பொயட் என ஒரு போட்டியை வைக்கலாம். சிறந்த பாடலாசிரியர்களுக்கான அந்த ஷோவையும் தொகுத்து, இயக்கி, தயாரித்து, புரொமோட் செய்து சின்னத்திரையில் தனுஷ் என்ட்ரியாகலாம்.

வாத்தியார் சமுத்திரக்கனி:

சின்னத்திரை

முன்பெல்லாம் எம்.ஜி.ஆருக்குத்தான் இந்தப் பெயர் இருந்தது. இப்போது படத்துக்குப் படம்... ‘வாழ்க்கைங்கிறது என்னன்னா...' 'காதல்ங்கிறது எப்படிப்பட்டதுன்னா...' எனத் தொகுதி பிரித்து பாடம் எடுப்பதால் சமுத்திரக்கனியையும் அப்படித்தான் கூப்பிட வேண்டியிருக்கிறது. அதனால் 'உங்களில் யார் பெஸ்ட் ஸ்டூடன்ட்?' எனப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஷோ வைத்து அதில் தொகுப்பாளராக சமுத்திரக்கனியை அப்பாயின்ட் செய்யலாம்.

மீம்ஸ் மன்னன் வடிவேலு:

சின்னத்திரை

சினிமாவில் முழு மூச்சாக நடித்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் சமூகவலைதளங்களில் இன்றும் வைகைப்புயலின் ராஜ்ஜியம்தான். மீம் க்ரியேட்டர்களுக்கு இவர்தான் குலசாமி. அதனால் 'சிறந்த மீம் க்ரியேட்டர் யார்?' என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தலாம். தேவையான பப்ளிசிட்டிகளை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்பதால் ப்ரொமோஷன் செலவுகள் மிச்சம். இதற்கு தொகுப்பாளராகவும் ஜட்ஜாகவும் வடிவேலுவை அழைத்து வந்தால் களை கட்டும் கச்சேரி.

வாட்ஸ் அப்பிலேயே வாழ்பவர்கள் சங்கம்:

சின்னத்திரை

வீட்டுக்கு வீடு திண்ணைகளில் உட்கார்ந்து அகாதுகா கதைகள் பேசும் கூட்டம்தான் இப்போது வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. இப்படி மொபைலே கதி எனக் கிடப்பவர்களை வைத்து ஷோ செய்யலாம். அதைத் தொகுத்து வழங்க பொருத்தமான நபர் எஸ்.வி சேகர்தான். சென்னை வெள்ளத்தில் முதலை எஸ்கேப்பானது முதல் 2000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் சிப் வரை என்ன பார்வேர்டு வந்தாலும் அதை அப்படியே நம்பி போராளி மோடுக்குச் செல்லும் வேற லெவல் ஆள் அவர்தானே!

சிம்பு - தி மேன் ஆஃப் மூவிஸ்:

சின்னத்திரை

சிம்பு ஹிட் படம் கொடுத்ததற்குப் பின் இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்துவிட்டன. இன்னமும் தொலைத்த ஃபார்மை தேடிக்கொண்டிருக்கிறார். இதில் லேட்டஸ்ட்டாக அதிகபட்ச பில்டப்களோடு வந்த 'அஅஅ' படம் உலகத்தரம் என்ற விமர்சனங்கள் வேறு. இப்படித் தொடர்ந்து க்ளாசிக் படங்களில் நடிக்கும் சிம்பு 'குறும்பட இயக்குநர்களுக்கான ஷோ' ஒன்றைத் தொகுத்து வழங்கலாம். கண்டிப்பாக ஒரு சீசனையே மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு எடுக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close