தமிழக அரசியல்ல நாட்டாமை விஜயகுமாரும் சின்னத்தம்பி பிரபுவும் யார் தெரியுமா? #VikatanFun

அரசியல்

இன்னிக்குத் தேதியில் அரசியல், சினிமா ரெண்டிலும் 'நடிப்பு' என்பது கிட்டத்தட்ட ஒண்ணுதான் சார். அதிலும் தமிழ் சினிமாவின் சில க்ளாசிக் கேரக்டர்களுக்கு நம்ம அரசியல் பிரபலங்கள் சும்மா அப்படியே நச்செனப் பொருந்திப் போவார்கள். அப்படி என்னென்ன கேரக்டர்களுக்கு நம் தலைவர்கள் பொருந்திப் போகிறார்கள் என்பதை பார்ப்போமா?  

என்னதான் கலர்புல் படங்கள் வந்து கண்ணை நிறைத்தாலும் ப்ளாக் அண்ட் ஒயிட் க்ளாசிக்கான பராசக்தி படத்தை மறந்துவிட முடியுமா என்ன? அதில் வரும் 'ஓடினேன் ஓடினேன்' டயலாக்கை கொஞ்சம் கூட பிசகில்லாமல் சொல்லக்கூடிய அளவிற்கு தெம்பு வைகோவிற்கு மட்டுமே இருக்கிறது. 'நடந்தேன் நடந்தேன் தமிழகத்தின் எல்லைக்கே நடந்தேன்... காவிரிக்காக நடந்தேன், முல்லைப் பெரியாறுக்காக நடந்தேன்' என டாப் கியர் தட்டி ஆக்ஸிலேட்டரை மிதித்தால் சும்மா ஜிவ்வென இருக்குமே!

நாட்டாமை படத்தில் எட்டுக்கட்டை குரலில் 'செல்லாது செல்லாது' என சொம்பில் துப்புவாரே... தட் க்ளாசிக் கேரக்டருக்கும் குரல் வளத்துக்கும் அப்படியே பொருந்திப் போவது நம் சீமான்தான். கண் சிவக்க, 'நீ ஆந்திராவா? செல்லாது செல்லாது!' 'நீ வங்காளமா? செல்லாது செல்லாது!' என ஹை பிட்சில் பேசும் ஸ்டைல் போதாதா இதை நிரூபிக்க? சொல்லும்போதே மாட்டு வண்டி வர்ற சத்தம் கேட்குதே... அடடா!
 

ஒரு காலத்துல டெரரா இருந்தாலும் இப்போ அநியாயத்துக்கு அப்பாவியா ஆகிட்டார் நம்ம கேப்டன். அதனால அவருக்குச் சின்னத்தம்பி பிரபு கேரக்டர்தான் சரியா இருக்கும். அந்தப் படத்துல குஷ்புதான் மொத்த பிரச்னைகளையும் சமாளிச்சு நிப்பாங்க. இப்போ அப்படி எல்லாத்தையும் சமாளிச்சு நிக்கிறது பிரேமலதாதான். இதைவிட அந்தப் படத்துக்கும் கேப்டனுக்கும் வேற பொருத்தம் வேணுமா என்ன?

ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் நடக்குற பனிப்போரைப் பாக்குறப்போ சேரன்பாண்டியன் படத்துல வர்ற விஜயகுமாரும் சரத்குமாரும்தான் ஞாபகத்துக்கு வர்றாங்க. அப்புறமென்ன? அவங்களுக்குப் பொருத்தமான படம் சேரன் பாண்டியன்தான். அந்தப் படத்துல ஆனந்த்பாபு ரெண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்க போராடுற மாதிரி இங்கே கலைஞர் குடும்பமே போராடுது. என்ன.. அந்தப் படத்தில கடைசில ரெண்டு பேரும் சேர்ந்துடுவாங்க. இங்கேதான் அதுக்கு வாய்ப்பே இல்லன்னு தோணுது.

கடைசியா வர்றது நம்ம வடிவேலு. ஏங்க அவர் எப்படி இந்த லிஸ்ட்லனு கேக்குறீங்களா? அவரும் அரசியல்ல தீவிரமா பிரசாரம் பண்ணவர்தானே! அவருக்கு அவர் படத்துல பண்ண கேரக்டரே கச்சிதமா பொருந்தும். டீக்கடை முன்னால முதுகு கவிழ விழுந்துட்டு, 'நான் பாட்டுக்கு செவனேன்னுதானய்யா இருந்தேன். யார் வம்பு தும்புக்காவது போனேனா'னு பேசுவாரே! யெஸ் அதே கேரக்டர்தான். பை தி வே... சீக்கிரம் வாங்க சார். நீங்க இல்லாம சினிமா போரடிக்குது!
  

நம்ம அரசியல்வாதிகளுக்கும் சினிமா கேரக்டர்களுக்கும் இருக்குற ஒற்றுமைகளை வச்சு ஒரு படம் ஓட்டியாச்சு. அப்புறமென்ன? நன்றி வணக்கம்தான். போய்ட்டு வர்றேன் ப்ரெண்ட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!