Published:Updated:

மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் விடுப்பு அளிக்கும் மும்பை நிறுவனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் விடுப்பு அளிக்கும் மும்பை நிறுவனம்
மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் விடுப்பு அளிக்கும் மும்பை நிறுவனம்

மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் விடுப்பு அளிக்கும் மும்பை நிறுவனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்படும் என மும்பையிலுள்ள நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் தேவ்லீனா எஸ் மஜும்தர் (Devleena S Majumdar,) கூறுகையில், “எங்களின் நிறுவனத்தில் கிட்டதட்ட 35% பெண்கள் பணிபுரிகிறார்கள்.  இதுபோன்ற சமயங்களில், அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டால், மறுநாள் அவர்கள் தங்களின் வேலையைத் திறம்படச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.”, என்று தெரிவித்திருக்கிறார். 

மேலும், இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரி, மனித வளத்துறைக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் இணையம் மூலம் மனு ஒன்றை இந்த நிறுவனம் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, இத்தாலி, ஜப்பான், தெற்கு கொரியா ஆகிய நாடுகளில், பெண்கள்  மாதவிடாய் காலத்தில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிறுவனம் பெண்கள் தங்கள் மாதவிடாய் முதல்நாளில் எப்படி உணர்வார்கள் என்பதையும் ஒரு வீடியோப் பதிவாக வெளியிட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு