Published:Updated:

அணு சக்தி விவகாரத்தில் சூழ்ச்சி -மத்திய அமைச்சருக்கு சுப.உதயகுமாரன் கண்டனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அணு சக்தி விவகாரத்தில் சூழ்ச்சி -மத்திய அமைச்சருக்கு சுப.உதயகுமாரன் கண்டனம்!
அணு சக்தி விவகாரத்தில் சூழ்ச்சி -மத்திய அமைச்சருக்கு சுப.உதயகுமாரன் கண்டனம்!

அணு சக்தி விவகாரத்தில் சூழ்ச்சி -மத்திய அமைச்சருக்கு சுப.உதயகுமாரன் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அணு சக்திக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்த கருத்துக்கு, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அணுமின் நிலையங்களை எதிர்க்கும் மாநிலங்களுக்கு அணு உலை மின்சாரத்தைக் கொடுக்க மாட்டோம் என மத்திய எரிசக்தி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவருமான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ள கருத்து என்பது, அணு உலைகளைக் கடுமையாக எதிர்க்கும் எதிர்கட்சிகள் ஆளும் கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை தனிமைப்படுத்தும் ஒரு சூழ்ச்சிதானே தவிர வேறல்ல.

அணு சக்தி விவகாரத்தில் சூழ்ச்சி -மத்திய அமைச்சருக்கு சுப.உதயகுமாரன் கண்டனம்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அல்லது மோடி அரசாங்கம் இந்தக் கருத்தில் உண்மையான உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தால், கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை கோலாரில் புதைக்க, அப்போதைய பா.ஜ.க. முதல்வர் ஜகதீஷ் ஷட்டர் மறுத்தது தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும். கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை ஏற்க மறுக்கும் கர்நாடகாவுக்கு கூடங்குளத்திலிருந்து மின்சாரம் தர மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். வரவிருக்கும் கர்நாடக மாநிலத் தேர்தலில் இந்த திடீர் ஞானோதய அணுசக்திக் கொள்கையை முன்வைத்து பிரசாரம் செய்ய வேண்டும். இதனை எல்லாம் செய்வார்களா?

மக்களைக் குழப்பி, மாநிலங்களுக்கு இடையே பிரிவினைகளை உண்டு பண்ணும் இன்னொரு பாசிச சதிதான் இதுவே தவிர, உண்மையான, உளபூர்வமான கொள்கையோ, திட்டமோ அல்ல. மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. அதிகமாக, அடர்த்தியாக மக்கள் வாழும் இந்தியாவுக்கு அணுசக்தி தேவையல்ல, பாதுகாப்பானதல்ல என்று முடிவெடுப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு