Published:Updated:

'கால் வாங்க காசு இல்லை': சேலம் இளைஞனின் சோகக்கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'கால் வாங்க காசு இல்லை': சேலம் இளைஞனின் சோகக்கதை!
'கால் வாங்க காசு இல்லை': சேலம் இளைஞனின் சோகக்கதை!

'கால் வாங்க காசு இல்லை': சேலம் இளைஞனின் சோகக்கதை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்ப்புக் கூட்டத்துக்கு வீடு இல்லை, வாசல் இல்லை என்று பலரும்  வந்தார்கள். ஆனால் அவர்களில் ஓர் இளைஞர், 'செயற்கைக் கால் வாங்க காசு இல்லை' என்று வந்தது, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.  

அந்த இளைஞரிடம் விசாரித்தபோது, ''என் பெயர் கண்ணன். நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் உள்ள தம்மம்பட்டியிலிருந்து வந்திருக்கிறேன். எங்க அப்பா பெயர் மூக்கன்.  அஞ்சு வருஷத்துக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார். அம்மா கூலி வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. அவுங்க வருமானம், குடும்பச் செலவுக்கே பற்றாக்குறையாக இருக்கிறது. நான் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கட்டடம் கட்டும் கொத்தனார் வேலைக்கு போயிட்டிருந்தேன். அந்த வருமானமும் எங்க அம்மா சம்பாதிக்கும் வருமானமும் குடும்பத்துக்குப் போதுமனதாக இருந்தது.

 ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் வேலை விட்டு வரும்போது, ஏத்தாப்பூர் அருகே விபத்து ஏற்பட்டு என் வலது கால் முறிஞ்சிடுச்சு. எங்க குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால தரமான செயற்கை கால் பொருத்த வசதி இல்லை. விலை குறைவான செயற்கை காலைப் பொருத்தினேன். இதனால் சரியாக நடக்க முடியவில்லை. கால் ரொம்ப வலிக்கிது. தரமான கால் வாங்குறதுக்கு எங்ககிட்ட காசு இல்லை. அதனால, கலெக்டரிடம் மனு கொடுத்துட்டுப்போக வந்தேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு