Published:Updated:

வீட்டில் இருந்த  நொறுக்குத் தீனிகளையும் காணோம்... கோவையில் விநோதத் திருடர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டில் இருந்த  நொறுக்குத் தீனிகளையும் காணோம்... கோவையில் விநோதத் திருடர்கள்!
வீட்டில் இருந்த  நொறுக்குத் தீனிகளையும் காணோம்... கோவையில் விநோதத் திருடர்கள்!

வீட்டில் இருந்த  நொறுக்குத் தீனிகளையும் காணோம்... கோவையில் விநோதத் திருடர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில், பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் பணம் மற்றும் லேட்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கோவை துடியலுரை அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் குடியிருப்பவர் ராஜேந்திரகுமார். இயந்திர உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்துவரும் இவர், நேற்று காலை 11 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு உடையாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவு 10 மணி அளவில் திரும்பிவந்து வீட்டின் கதவைத் திறந்தபோது, வீட்டின் முன் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ராஜேந்திரகுமார், வீட்டின் பின்பக்கமாகச் சென்று பார்த்தபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு மேலும் அதிச்சியடைந்தார்.  அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் கொள்ளைபோயிருந்தது.  

அதுமட்டுமல்லாமல், பிரிட்ஜில் இருந்த பழங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளையும் கொள்ளையர்கள் வேட்டையாடியிருக்கிறார்கள். அந்தத் தின்பண்டங்களைச் சாவகாசமாக அங்கேயே அமர்ந்து தின்றுவிட்டு, திருடிய நகை, பணம், லேப்டாப் போன்றவற்றை குழந்தையின் புத்தகப் பையில் வைத்து எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்ததுள்ளது. 

இதுகுறித்து துடியலூர் போலீஸாருக்கு ராஜேந்திரகுமார் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த துடியலூர் போலீஸார், கைரேகை நிபுணர்களைக்கொண்டு அங்கு பதிந்திருந்த கை ரேகைகளைப் பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு