Published:Updated:

புதுச்சேரி பந்த் போராட்டம் – கிரண்பேடி கேட்கும் 8 கேள்விகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதுச்சேரி பந்த் போராட்டம் – கிரண்பேடி கேட்கும் 8 கேள்விகள்
புதுச்சேரி பந்த் போராட்டம் – கிரண்பேடி கேட்கும் 8 கேள்விகள்

புதுச்சேரி பந்த் போராட்டம் – கிரண்பேடி கேட்கும் 8 கேள்விகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையில்லாமல், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளித் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சகம் எம்எல்ஏ-க்களாக நியமித்தது. அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே, அவர்களுக்கு ராஜ்நிவாஸில் ரகசியமாக பதவிப் பிரமாணத்தைச் செய்துவைத்தார் கிரண்பேடி. இந்த விவகாரம் அவருக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. கடந்த 8-ம் தேதி, ஆளும் கட்சியின் ஆதரவுடன் தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின. அப்போது, கிரண்பேடிக்கும் மத்திய அரசுக்கும் எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து பந்த் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் செயல்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முதல்வர் நாராயணசாமிக்கு, ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட அறிக்கையில், எட்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். “பந்த் போராட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் அளித்த அறிக்கைக்கும், ஊடகங்கள், நாளிதழ்களில் வெளி வந்த தகவல்களுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இது தொடர்பாக நீதித்துறை நடுவர் (Magistrate) அளவிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட முதல்வருக்கு ஆளுநர் செயலகம் பரிந்துரை செய்துள்ளது.

1. பந்த் நடைபெற்ற அன்று பதிவான மற்றும் பதிவாகாத வன்முறைச் சம்பவங்கள் எத்தனை?

2. வன்முறைகளைத் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

3. காவல்துறை அதிகாரிகளின் செயல்திறன், பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க காவலர்கள் நிறுத்தப்பட்டார்களா?

4. வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோர்மீது சரியான குற்றப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டனவா?

5. சமூக அமைதி சீர்குலைப்பு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக, உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா?

6. வன்முறைச் சம்பவங்கள், நீதிமன்ற ஆதாரத்துக்காக வீடியோ காட்சியாகப் பதிவுசெய்யப்பட்டதா ?

7. பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதிலும் சமூக அமைதியை நிலைநாட்டுவதிலும் தாலுகா நடுவர், துணை மாவட்ட நீதிபதி ஆகியோரின் பங்கு என்ன?

8. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான செயல்திட்டம், அனுபவப் பாடங்கள் என்ன ?

மேலே கூறப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பாக நீதிபதி விசாரணை செய்ய வேண்டும்.  மேலும், இந்த விசாரணையை 15 நாள்களில் முடித்து, அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார், கிரண்பேடி.

படங்கள்: அ.குரூஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு