Published:Updated:

டயர் பஞ்சரால் தீவிரவாதிகளிடம் சிக்கி உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள்!

டயர் பஞ்சரால் தீவிரவாதிகளிடம் சிக்கி உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள்!
டயர் பஞ்சரால் தீவிரவாதிகளிடம் சிக்கி உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள்!

டயர் பஞ்சரால் தீவிரவாதிகளிடம் சிக்கி உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள்!

மர்நாத் பனிலிங்க தரிசனம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பேருந்துமீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஏழு பேர் பலியாகியுள்ளனர். போலீஸார் உள்ளிட்ட 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பதான்யாகு நெடுஞ்சாலையில், 60 யாத்ரீகர்களுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. அப்போது, பின்வாங்கிய தீவிரவாதிகளிடம் பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்தின் முன்பக்கத்திலிருந்து உள்பகுதியை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதில், ஏழு பயணிகள் பலியானார்கள். அமர்நாத் கோயிலுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு  இரவு 7 மணிக்கு மேல் நெடுஞ்சாலைகளில் செல்ல அனுமதி இல்லை. ஆனால், ஸ்ரீநகரிலிருந்து பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் டயர் பஞ்சராகியுள்ளது. அதனால், இரண்டரை மணி நேரம் தாமதமானது. தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பியபோது, இரவு 8.20 மணிக்கு தீவிரவாதிகளிடம் பேருந்து சிக்கிக்கொண்டது.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் இந்த யாத்திரை ஏற்பாடுசெய்யப்படவில்லை. விதிமுறைகளை மீறியும் சாலையில் பாதுகாப்பு வாகனம் இல்லாமலும் பயணித்துள்ளனர். கொல்லப்பட்ட  ஏழு பேரில், ஆறு பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு முன் 2000-ல்,  பக்லாகாம் என்ற இடத்தில் 30 அமர்நாத் யாத்ரீகர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு