Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பெண்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தரும் அட்வைஸ்!

லட்சுமி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிக்கு இவர் தொகுப்பாளராக வந்த பிறகு பாதிக்கப்பட்டப் பெண்கள் வீட்டுக்கு ஜி தமிழ் குழுவோடு சென்று பிரச்னைகளைக் கேட்பது போன்ற லைவான விஷயங்களை செய்தவர். தற்போதும் அவ்வப்போது முக்கியமான பிரச்னைகளுக்கு நேரில் சென்றும் விசாரித்து வருகிறார். 


இந்நிலையில், பெண்களுக்கு மரியாதை முக்கியம், மேலும் ஒழுக்கம் ரொம்ப முக்கியம், கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டுமென அடிக்கடி பெண்கள் உரிமைக்காகப் பேசி வருபவர். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் உடை பற்றி பேசியிருக்கிறார். ''பெண்களுக்கும் சுயக்கட்டுப்பாடு வேண்டும். நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிவதில் தவறில்லை. அதுவே வெளியில் அணிந்து வரும் போது அது பிரச்னையாகும். அதுபோலத்தான் பெண்களும் இடத்துக்குத் தகுந்தாற்போல ஆடை அணிவது ரொம்பவே முக்கியம். அதேமாதிரி நான் மினி ஸ்கர்ட் போட வேண்டுமென நினைத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது. அது என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், சமூகம் என்று வரும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம்’’ என்று கூறியுள்ளார் எப்போதும் பட்டுப்புடவையில் பாந்தமாக வலம்வரும் லட்சுமி ராமகிருஷ்ணன். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement