வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (11/07/2017)

கடைசி தொடர்பு:20:34 (11/07/2017)

ஜூலை 31 அன்று வருகிறது காம்பஸ்! #JeepCompass

ஜீப்

''காம்பஸ் எஸ்யூவியின் புக்கிங் எண்ணிக்கை, 1,000 கார்களைக் கடந்துவிட்டது'' எனக் கடந்த மாதம் சொல்லியிருந்தோம். இந்நிலையில் ஆட்டோமொபைல் துறை நிபுணர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் காம்பஸ், வருகின்ற ஜூலை 31-ம் தேதியன்று அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வந்துள்ளன. இது இந்த நிறுவனத்தின் முதல் 'Made in India' தயாரிப்பு என்பது கவனிக்கத்தக்கது. அந்த கூற்றுக்கு ஏற்ப, காம்பஸ் எஸ்யூவியில் இருக்கும் 80 சதவிகித உதிரிபாகங்கள், உள்நாட்டு தயாரிப்பாளர்களிடமிருந்துதான் பெறப்பட்டுள்ளன. ஃபியட் க்ரைஸ்லர் நிறுவனத்துக்குச் சொந்தமாக, ரஞ்சன்கவுனில் இருக்கும் தொழிற்சாலையில் காம்பஸ் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஜப்பான், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் ஆகிய உலக நாடுகளுக்கும், இங்கிருந்து கார்கள் விரைவில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன; ஜீப்பின் இணையதளம் மற்றும் டீலர்களில், 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி, 5 வேரியன்ட் (Sport, Longitude, Longitude (O), Limited, Limited (O)) மற்றும் 5 கலர்களில் வேண்டியதை புக் செய்து கொள்ளலாம்;

காம்பஸ்

பெட்ரோல்/ டீசல் இன்ஜின், 2 வீல் டிரைவ்/ 4 வீல் டிரைவ், மேனுவல்/ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எனப் பல ஆப்ஷன்களில் கிடைக்கும் காம்பஸ், முதற்கட்டமாக 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் (170bhp/35kgm) - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்புடனே களமிறங்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம்! டூஸான், எண்டேவர், ஃபார்ச்சூனர், MU-X, டிகுவான், பஜேரோ ஸ்போர்ட் ஆகிய கார்களுக்குப் போட்டியாக வெளிவரும் காம்பஸ் எஸ்யூவியில், அனைத்து வேரியன்ட்டிலும் பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. டீசலில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (160bhp/ 25kgm) கொண்ட மாடலும், ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க