Published:Updated:

திருமண நாள் குறித்து கெளசல்யா சங்கர் எழுதிய உருக்கமான கவிதை!

திருமண நாள் குறித்து கெளசல்யா சங்கர் எழுதிய உருக்கமான கவிதை!
திருமண நாள் குறித்து கெளசல்யா சங்கர் எழுதிய உருக்கமான கவிதை!

திருமண நாள் குறித்து கெளசல்யா சங்கர் எழுதிய உருக்கமான கவிதை!

டுமலைப்பேட்டையைச் சேர்ந்த கெளசல்யாவும் சங்கரும் காதலித்தனர். சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு கெளசல்யாவின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்தது. அதை மீறி  திருமணம் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் தொடங்கிய இந்த ஜோடியை சாதி அரக்கன் விடவில்லை. சென்ற ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் நடுவீதியில் வைத்து சங்கர் ஆணவப் படுகொலைச் செய்யப்பட்டார். கெளசல்யா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். மக்கள் பலரும் சூழ்ந்திருக்க நடந்த இந்தப் படுகொலை, தமிழகம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கெளசல்யா உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகிறது.

கணவரின் இழப்பின் துயரத்தால் சில நாள்கள் சோர்ந்திருந்தார் கெளசல்யா. தனது கணவரை பலி வாங்கிய சாதிக்கு எதிரானப் போராட்டங்களில் தன்னையும் இணைத்துகொண்டு செயல்பட்டு வருகிறார். கெளசல்யா தலைமையில் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. முற்போக்கு கருத்துகொண்டோர், கெளசல்யாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று மரியாதை செய்கிறார்கள். தன் வாழ்வில் நடத்தப்பட்ட துயரத்தை நினைத்து முடங்கிவிடாமல், துணிவோடு களத்தில் நிற்கும் கெளசல்யா, பொதுவெளியில் தனது கருத்துகளை துணிவுடன் பதிவுசெய்து, பலருக்கும் ஊக்கச்சக்தியாக இருக்கிறார்.

கெளசல்யா - சங்கர் இருவரின் திருமண நாள் இன்று. அந்த நாளின் நினைவை வெளிப்படுத்தும் விதத்தில், கெளசல்யா தனது முகநூலில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதை..

இந்நாள்!

அம்மாவின் சாயலைக் கொண்டவளென்று - எம்மைக் கண்டதும் கூறினாய்!
அதற்கு நான்,
பொதுவான வார்த்தைகளிட்டு-பொருத்தமாக இருக்காதென்றேன்.
நீ கண்ணியமாக-என்னைவிட்டு கலைந்து சென்றாய்!

"சிறு இடைவெளியோடு"
மறுமுறை உனதுபேச்சு- "மன்னிப்பிலிருந்தது"

நீ தவறு செய்துவிட்டாய்-என்பதற்காக "அல்ல"
நான் உனது - "தாய்மை" எண்ணத்தை -"தவறாக" -நினைத்திடாது இருப்பதற்கா!

நீகடந்த
அந்நிமிடமே தாமதம்-இன்றும் காரணமில்லை-"என்னிடம்"
உனது நினைவிற்கு மாறாகத்தான்-நினைத்தேன்.
உண்டான இடைவெளியை-நமக்குள்-ஏனின்னும் உடைக்கவில்லையென்று!

கல்லூரி நண்பன்-என்றெனது-காதல் கணவனாவான் -எனநினைத்தேன்!

நாம் நினைத்தது-நிறைவேறியது-நாம்
நினைத்தவைகள்-நிறைவேறவில்லை!

நமது காதல்-நாமறிந்து-
பாராட்டிக்கொண்டபோது

நமது காதலை - எமது வீடறிந்து விட்டது.

"சாதி-சனத்தை" மனதில் நிறுத்தி
வழக்கம்போல்-எம்மைப் பெற்றவர்கள்-தன்வேலை பார்கையில்!

நமக்கான- கால இடைவெளி ஏதுமின்றி-இரு கரம்கோர்த்தோம்.
சாதியையும் உடைத்தோம்!

உடைந்த சாதியை-இணைக்க "எண்ணி"
எண்ணற்ற கனவுகளோடு-
எதிர்காலம் நோக்கி
ஊடலும்,கூடலுமின்றி-இணைந்திருந்த நம்மை,

பிரித்து வைத்துவிட்டார்கள்-மரணப்பரிசு கொடுத்து.
உன்னை-எம்மிடமிருந்து-என்னை உம்மிடமிருந்து.

ஆனால்?
நமது மனமும்-மனதின் நினைவும்-எவராலும்- பிரித்திட இயலாதவையடா
எனது மனவாளா!

ஈருயிராக இருந்தது இன்று-ஓருயிராகிவிட்டது.
சாதியைச் - சவக்குழியேற்றுவேனென்று
உன்மேல் உறுதியெடுத்துக்-கூறுகிறேன்.

இன்று நமது இரண்டாமாண்டு-
"மணநாளடா"

அடுத்த கட்டுரைக்கு