ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? (sponsored content) | All you need to know about Hotel management Study (sponsored content)

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (12/07/2017)

கடைசி தொடர்பு:18:49 (12/07/2017)

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? (sponsored content)

பயணம் மற்றும் சுற்றுலாத்துறை நமது நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். நம் நாட்டைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்தப் பயணம் மற்றும் சுற்றுலாத்துறை மூலமாக நமது நாட்டுக்கு வரும் வருமானமும் மிக அதிகம். இந்தப் பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வழக்கம் மிக அதிகமாகிவிட்டதால், பயணிகள் தங்குவதற்கென ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளும் அதிகரித்துள்ளது.

உயர்தர நட்சத்திர ஹோட்டல்களும் ரிசார்ட்டுகளும் அதிக அளவில் திறக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஹோட்டல்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பும் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற உயர்தர ஹோட்டல்கள் சிறப்பான சேவையை அளிப்பதற்கு அங்கு பணிபுரியும் பணியாளர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் அவசியம். மேலும் இவர்கள் தங்களது பணிகளை உணர்ந்து செயல்படுபவர்களாகவும் இருத்தல் அவசியமாகிறது.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் தங்கள் நீண்டகாலப் பணியாக எடுத்துக்கொள்ள விரும்புவர்கள் மிகுந்த பணிவுடனும், வேலையில் அர்ப்பணிப்புடனும், மற்றவர்களுடன் அன்பாகப் பழகத் தெரிந்தவராகவும், நன்கு உபசரிக்கும் முறைகளை அறிந்தவர்களாகவும் இருத்தல் அவசியம். விருந்தினர்களை நன்றாக உபசரிக்கத் தெரிந்தவர்களையே இந்தத் துறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்கூறிய அனைத்துத் திறன்களும் உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை உங்களுக்கானதுதான்.

வேலை வாய்ப்புகள் தேடி அலையும் தற்கால பணிச் சந்தையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு, நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் படிப்பாகும். அவ்வாறு ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் சிறந்த வேலைவாய்ப்புப் பெற முதல் படி, நல்ல அங்கீகாரம் பெற்ற ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைக் கற்றுத்தரும் கல்லூரியில் சேர்வதாகும். தமிழ்நாட்டில் இதற்கென சிறந்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளோமா படிப்பில் தியரி வகுப்புகளும், பிராக்டிக்கல் வகுப்புகளும் உண்டு. இங்கு பிராக்டிக்கல் வகுப்புகளில் கற்றுத் தரப்படும் நேரடியான அனுபவங்கள், நெறிமுறைகளோடு ஒரு ஹோட்டலை நடத்துவதற்கான சிறந்த வழிமுறைகளைத் கற்றுத் தரும். ஒரு ஹோட்டலை நடத்துவதற்கான தேவைகள், சூழ்நிலைகள் மற்றும் காரணிகள், அதில் ஏற்படும் பிரச்னைகள், தீர்வுகள் குறித்து தியரி வகுப்புகளில் கற்றுக்கொள்ளலாம். இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பராமரிப்புச் சேவைகள், பரிமாறும் முறைகள், வரவேற்பறை மரியாதைகள், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், உணவு மற்றும் குளிர்பானங்கள் பற்றிய அறிவு, பொதுவான செயல்பாடுகள் பற்றியும் கற்றுக்கொள்வார்கள்.

இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைப் படிக்க, குறைந்தது 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 3 வருட பட்டதாரிப் படிப்புகள் படித்தவர்களும் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். பொதுவாக இந்தப் படிப்பிற்கு முதலில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும், குழு விவாதமும் இருக்கும். இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு 6 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை இருக்கும். ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி பயின்றவர்கள் ஹோட்டல் துறையிலேயே பணிபுரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் விமான சேவைப் பிரிவுகளிலும் பணிபுரியலாம். ‘கேபின் க்ரூ’ பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பொது உறவுகள் அதிகாரியாகவும் (Public Relations Officer) விண்ணப்பிக்கலாம். சுருங்கக் கூறினால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி உங்கள் வேலைவாய்ப்புக்கான சாவி!

Sponsored By: சென்னைஸ் அமிர்தா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்