Published:Updated:

'டியூப் லைட்' தோல்வியைச் சரிகட்ட நஷ்ட ஈடு!

தார்மிக் லீ
'டியூப் லைட்' தோல்வியைச் சரிகட்ட நஷ்ட ஈடு!
'டியூப் லைட்' தோல்வியைச் சரிகட்ட நஷ்ட ஈடு!

'டியூப் லைட்' தோல்வியைச் சரிகட்ட நஷ்ட ஈடு!

சல்மான் கான் நடிப்பில் உலகப் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் 'டியூப்லைட்'. இந்தப் படம் ஜூன் மாதம் 23-ம் தேதி அன்று வெளியானது. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால் படம் படுதோல்வியை அடைந்தது. இந்நிலையில் படத்தின் விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதால், சல்மான் கானிடம் நஷ்ட ஈடு கேட்டு முறையிட்டனர். இதைத் தொடர்ந்து பாலிவுட் வட்டாரத்தின் வர்த்தக ஆய்வாளர் கோமல் நாஹ்தா(Komal Nahta) அவரது ட்விட்டர் பக்கத்தில் 'டியூப் லைட் படம் தோல்வியடைந்த காரணத்தால் சல்மான் கான் நஷ்ட ஈடு அளிக்கச் சம்மதித்துவிட்டார். இது அவருடைய நல்ல உள்ளத்தைக் குறிக்கிறது. இது நல்ல மனிதருக்கான அடையாளம்' இவ்வாறு நேற்று மாலை ட்வீட் போட்டுள்ளார். 

இதற்கு முன் சல்மான் கான் நடித்த அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், எதிர்பாராத விதமாகச் சென்ற மாதம் ரம்ஜானுக்கு வெளியான 'டியூப் லைட்' திரைப்படம் தோல்வியடைந்த காரணத்தால் படத்தின் விநியோகஸ்தர்கள் பெறும் பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து, இழப்பீட்டை சரிகட்ட ரூ.55 கோடி நஷ்ட ஈடு வழங்க சல்மான் கான் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு