Published:Updated:

'காலிப்ரி' எழுத்துருவால் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர்!

'காலிப்ரி' எழுத்துருவால் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர்!
'காலிப்ரி' எழுத்துருவால் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர்!

'காலிப்ரி' எழுத்துருவால் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர்!

பனாமா பேப்பர்ஸ் மூலம் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு எதிரான ஆதாரமாக அவருடைய மகள் சமர்ப்பித்த ஆவணங்களே திரும்பியுள்ளன. 

சமீபத்தில் வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் பல்வேறு பிரபலங்களின் ஊழல் விவரங்கள் வெளியாகின. அதில் இந்தியாவின் பிரபல நடிகர் நடிகைகள்கூட தப்பவில்லை. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பல்வேறு நபர்கள் பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளிச்சத்துக்கு வந்தனர். பாகிஸ்தான் பிரதமரும் நவாஸ் ஷெரிஃப்பும் அதில் ஒருவர். 

இந்த நிலையில், அவர் குற்றமற்றவர் என்று சொல்ல அவருடைய மகள் மரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களே அவர் ஊழல் செய்ததை உறுதிசெய்திருப்பதற்கான ஆதாரமாக மாறியுள்ளன. அது வேறு ஒன்றுமில்லை. அந்த ஆவணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருதான். 2006-ல் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ஆவணங்களில் 'காலிப்ரி' என்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருந்தது. 

இந்த எழுத்துருவானது 2007 வரை வணிகக் காரணங்களுக்காகக் கொண்டுவரப்படவில்லை. பிறகு எவ்வாறு 2006-ல் இந்த ஆவணங்களை 'காலிப்ரி' எழுத்துருவில் தயாரித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார் பாகிஸ்தான் பிரதமர். 
 

அடுத்த கட்டுரைக்கு