Published:Updated:

நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய கூட்டமைப்பு .....!

நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய கூட்டமைப்பு .....!
நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய கூட்டமைப்பு .....!

நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய கூட்டமைப்பு .....!

மக்களுக்கு எதிரான மத்திய அரசின் எந்தத் திட்டமாக இருந்தாலும் மாநில அரசின் திட்டமானாலும் அதை எதிர்த்து மக்களே நேரடியாகப் போராடி வருகிறார்கள். பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூகநல அமைப்புகளும் தனித்தனியாக சென்று ஆதரவு அளித்து வருகின்றன.

இப்படி ஆதரவு அளிப்பதால் போராட்டம் நடத்தும் மக்களையும் ஆதரவு கொடுக்கும் அமைப்புகளையும் பிரிக்கிறது அல்லது ஒடுக்குகிறது அரசுகள். ஆதரவு தரும் அமைப்புகள் மீது பொய்யான தகவல்களைப் பரப்பும் செயலில் அரசு தரப்பு ஈடுபடுகிறது. அரசின் சூழ்ச்சியைத் தடுக்க வேண்டுமென்றால், பொதுமக்களின் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும், அதற்கு  ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டனர்.

இது சம்பந்தமாக, தமிழகத்தில் செயல்பட்டு வரும் முக்கிய அமைப்புகள், சமீபத்தில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய கூட்டமைப்பு உருவாக்கியுள்ளனர்.   

பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், மக்கள் சிவில் உரிமை கழகம், ஆதித்தமிழர் பேரவை, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு, பெண்கள் எழுச்சி இயக்கம், மே17 இயக்கம், தமிழ்தேச மக்கள் கட்சி, ஐந்திணை இயக்கம், தமிழ்புலிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, ஆம் ஆத்மி கட்சி, வுமன் மூவ்மென்ட் ஆப் இந்தியா, அம்பேத்கர் தேசிய இயக்கம், தைப்புரட்சி இயக்கம், நாணல் நண்பர்கள், முற்போக்கு மாணவர் கழகம், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் இணைந்து இக்கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதற்கு செயற்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் இன்னும் பல இயக்கங்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் கைவிடப்படும் வரை சமரசமின்றி பிரசாரங்களையும், போராட்டங்களையும் இக்கூட்டமைப்பு மேற்கொள்ளும். மாநில முழுவதும் இக்கூட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் என்றும் தீர்மானித்துள்ளனர்.  இக்கூட்டமைப்பு சார்பாக மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது போராடிக்கொண்டிருக்கும் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுடன் இக்கூட்டமைப்பு இறுதிவரையில் துணை நிற்கும் என்றும் தீர்மானித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு