Published:Updated:

”இனிமே பசுமாடு பேரைக் கூட சொல்லக் கூடாது!” - கட்டளை போட்ட சென்ஸார் போர்டு

இந்தியப் பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்தியா சென் மற்றும் பொருளாதார வல்லுநரான கௌசிக் பாசு இருவரும் தோன்றும் ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இருவரின் கலந்துரையாடல் நிறைந்த ‘The Argumentative Indian' என்கிற பெயரில் இரண்டு பகுதிகள் கொண்டதாக வெளிவரவிருக்கும் இந்த ஆவணப்படம் இயக்குநர் சுமன் கோஷால் உருவாக்கப்பட்டது.

ஆவணப்படத்தை கொல்கத்தாவில் இருக்கும் சினிமா தணிக்கை குழுவின் பார்வைக்கு அனுப்பிய நிலையில், தணிக்கைக் குழு படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் மட்டுமே தரமுடியும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் கூறிய தணிக்கைக் குழுவினர், ’ஆவணத்தில் அமர்த்தியா சென் பசு, இந்துத்துவம், இந்தியாவில் இந்துத்துவம் என்கிற வார்த்தைகளை எல்லாம் உபயோகித்து உள்ளார். இந்த வார்த்தைகளுக்கு ’பீப்’ சத்தம் கொடுத்து மறைத்தால் மட்டுமே படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்படும்’ என்று கூறி மறுத்துள்ளார்கள்.

’இந்தியா இந்த நூற்றாண்டில் கண்ட ஆகப்பெரும் அறிவுஜீவியான அமர்த்தியா சென்னுக்கே இப்படியொரு நிலையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் படத்தின் இயக்குநர் சுமன் கோஷ்.

அடுத்த கட்டுரைக்கு