Published:Updated:

பூக்கள் இல்லை என்றால் உலகமே ஏது?

பூக்கள் இல்லை என்றால் உலகமே ஏது?
பூக்கள் இல்லை என்றால் உலகமே ஏது?

பூக்கள் இல்லை என்றால் உலகமே ஏது?

பூக்கள் எல்லாம் வாசத்தை இழந்து விட்டால் என்ன ஆகும்?

நமக்கு அது பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம். நம் கவலை எல்லாம் பிக் பாஸில் வெளியான பரணி பற்றியே இருக்கும். இருக்கட்டும். கொஞ்சம் மேலே கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? பூக்கள் வாசத்தை இழந்து விட்டால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. பூக்களை அழகுக்காக மட்டும் தானே ரசிக்கிறோம் என்கிறீர்களா? சரி தான். அழகான கலப்பின பூக்கள் வாசனை இழந்து பல காலம் ஆகிறது. ஆனால், பூக்கள் வாசனையை இழந்தால் உலகமே இருக்காது என்பதுதான் விஞ்ஞானிகளின் கவலை. நாளுக்கு நாள் பூக்கள் வாசனையை இழந்து வருகிறது என்பது திடுக்கிடும் உண்மை. மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலைகளின் மாசு என பல காரணங்களால் காற்று தூசாக மாறிவருகிறது. இதனால் பூக்களின் மணம் பரவும் தூரம் குறைந்து வருவதாக இயற்கையை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

பூக்களின் வாசனை மூலக்கூறுகள் காற்றில் வேகமாக பரவுபவை. காற்று கடத்திச் செல்லும் இந்த வாசனை இப்போது குறைந்து போனது பூக்களின் ரசாயன கலப்பால் மட்டுமல்ல. காற்றும் மாசடைந்து கனமாகி விட்டதால் வாசனையை மறைத்து விடுகின்றன. அதாவது  தூய்மை கெட்ட காற்று வாசனை மூலக்கூறுகளுக்கிடையே அதிக இடைவெளியை உண்டாக்கி விடுகின்றன. இதனால், மகரந்தச்சேர்க்கை ஏற்படுத்தும் பூச்சியினங்கள் அதிகம் பாதிப்படைகின்றன.  பூக்களின் கிட்டே சென்றால் மட்டுமே வாசனையை அவை உணர்கின்றன. பூக்கள் கனிகளாக மாறும் அற்புதமான விஷயத்துக்கு உதவும் பூச்சி, வண்டினங்களை ஈர்க்கும் வாசனையின் தூரம் கடந்த 20 ஆண்டுகளில் மட்டுமே மூன்றில்  ஒரு பங்கு குறைந்து விட்டது என்கிறார்கள். அதாவது மூன்றடி வரை வாசம் வீசிய பூக்கள் இப்போது ஒரு அடிக்குள் தான் மணம் பரப்புகின்றன. வண்டுகள் பூக்களை தேடாவிட்டால் காய் ஏது? கனி ஏது? விதை ஏது? தாவர இனமே ஏது? தாவரங்கள் இல்லாவிட்டால்.. உயிரினங்கள் இல்லை.. உலகமும் இல்லை தானே? பூக்கள் மணம் வீச வேண்டும் என்றால் காற்றை தூய்மை ஆக்குவோம்.

அடுத்த கட்டுரைக்கு