Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்பேம் கால்கள் பட்டியலில் கவலைக்கிடமான இடத்தில் இந்தியா!

வாகன நெரிசலுக்கு மத்தியில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, மொபைல் போனின் ரிங் ஒலித்தாலே பலருக்கும் எரிச்சல் வரும். அதிலும், வந்த அழைப்பு 'ஸ்பேம் கால் (Spam Call)' என்றால் எரிச்சல் பன்மடங்கு அதிகமாகும்.

ஸ்பேம் கால்கள் பட்டியல்

Caller ID சேவை வழங்கும் நிறுவனமான 'ட்ரூ காலர்', தேவையற்ற அழைப்புகள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேவையற்ற அழைப்புகள் அதிகமாகப் பதிவாகும் 20 நாடுகள் கொண்ட இந்தப்பட்டியலில், இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தியாவில் ஒரு மாதத்துக்குச் சராசரியாக 22.6 தேவையற்ற அழைப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் 20.7 தேவையற்ற அழைப்புகள் பதிவாகியுள்ளன. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் சிலியும், நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, மொபைல் ஆபரேட்டர்களாலும், வர்த்தக நிறுவனங்களாலும் அதிகமாகத் தேவையற்ற அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக, இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சிறப்பு ஆஃபர்கள் பற்றிய அறிவிப்புகள், டேட்டா பிளான், அன்லிமிட்டட் கால்ஸ் குறித்த அறிவிப்புகளுக்காக, மொபைல் ஆபரேட்டர்களால்தான் தேவையற்ற கால்கள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதாக ட்ரூ காலர் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close