Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி-க்கு முன்... ஜி.எஸ்.டி-க்குப் பின்... தங்கத்துக்கு வரிவிதிப்பு எப்படி?

ஜி.எஸ்.டி (GST) குறித்த பேச்சுகள் இன்னும் ஓயவில்லை. இன்றும் இணையத்தில் என்னுடைய `ரெஸ்டாரன்ட் பில்' பாரீர் என்று படத்தைப் போட்டுத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் இதற்கு முன் வரியே இல்லாதது போலவும், புதிதாக ஜி.எஸ்.டி வரி வந்தது போலவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹோட்டல்களில் இதற்கு முன் சேவை வரி, வாட் வரி, சுவச் பாரத் செஸ் வரி, கிரிஷ் கல்யாண் செஸ் வரி எனப் பல வரிகள் இருந்தன. இதைப்போல, உணவு முதல் தங்கம் வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி செலுத்தி வருகிறோம்.  இப்போது இதனை சீர்ப்படுத்தி மொத்தமாக ஒரே வரி ஜி.எஸ்.டி எனக் கொண்டுவந்துள்ளனர். 

GST

ஆனால், என்னதான் வரி விதிப்பு முறையில் கொஞ்சம் சீர்ப்படுத்தினாலும் தங்கத்துக்குக் கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளதால் இதன் விலை அதிகரிக்க உள்ளது. இந்த நிலையில் ஜி.எஸ்.டிக்கு முன், பின் தங்கத்துக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பது குறித்து ஆடிட்டர் எஸ்.பிரபுவிடம் கேட்டோம். 

"ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகள் மீது வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல், மது, மின்சாரம் உள்படச் சிலவற்றிற்கு ஜி.எஸ்.டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு ஒரே வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுதான் ஜி.எஸ்.டி. 

தற்போது பல்வேறு மாநிலங்கள் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு வரிகளை வசூலித்து வருகின்றன. மேலும் பெரும்பாலான வர்த்தகங்களுக்குக் கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி செலுத்தி வருகின்றன. இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் அனைத்து வரிகளும் ஒரே வரியின் கீழ்கொண்டு வரவே ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களைக் களைவதற்கு இந்த முறை பின்பற்றப்படும். 

ஜி.எஸ்.டி-க்கு முந்தைய, பிந்தைய வரி நிலவரம்! 

இதற்கு முன் சுங்க வரி 10 சதவிகிதத்தை தவிர்த்து, கலால் வரி 1 சதவிகிதமும், மதிப்புக் கூட்டு வரி 1 சதவிகிதமும் தங்கத்துக்கு வரியாக தங்கம், ஜிஎஸ்டி, பிரபுவிதிக்கப்பட்டது; செய்கூலிக்கு எந்த வரியும் இல்லை. ஆனால், இப்போது ஜி.எஸ்.டியில் தங்கத்துக்கு 3 சதவிகிதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர செய்கூலிக்கு 5 சதவிகிதம் எனப் புதியதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன் இதன் வரி விகிதங்கள் 0%, 5%, 12%, 18% மற்றும் 28% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே தங்கத்துக்குக் குறைந்தது 5 சதவிகிதம் என்ற அளவில் வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தங்கத்துக்கு 3 சதவிகிதம் வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 சதவிகிதம் ஜி.எஸ்.டி என்பது முந்தைய கலால் வரி 1 சதவிகிதம், மதிப்புக் கூட்டு வரி 1 சதவிகிதத்தை விடவும் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்த போதிலும் ஜி.எஸ்.டியினால் தங்க விற்பனை முறைப்படுத்தப்பட்டு அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். புதிய ஜி.எஸ்.டி 3 சதவிகிதம் வரியினால் ஏற்படும் விலை மாற்றத்தை (8 கிராம் தங்க நகைக்கு) அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

GST

1 கிராம் தங்கம் ரூ.2,900 என்று எடுத்துக்கொண்டால், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.23,200. இதற்குச் சுங்க வரி 10 சதவிகிதம் எனில் ரூ.2,320. மொத்தம் ரூ.25,520. இதனையடுத்து, கலால் வரி 1 சதவிகிதம் அதாவது ரூ.255.20 வசூலித்தால் ரூ.25,775.20. இதன் பிறகு மதிப்புக் கூட்டு வரி 1 சதவிகிதம் அதாவது ரூ.257.75 வசூலித்தால் மொத்தம் ரூ.26,032.95. செய்கூலி தோராயமாக 8 சதவிகிதம் ரூ.2,041.60 எனில், இறுதியில் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,074.55. ஆனால், இப்போது ஜி.எஸ்.டிக்குக் கூடுதலாக ஒரு சதவிகிதம் வரி அதாவது மொத்தமாக 3 சதவிகிதம் என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தங்கத்தின் செய்கூலிக்குப் புதியதாக 5 சதவிகிதம் என வரி விதிக்கப்படுகிறது. இதனால், 8 கிராம் தங்கத்தின் விலை தோராயமாக ரூ.355 அளவிற்கு வரி அதிகரிக்கும்" என்றார் அவர். 

ஜி.எஸ்.டி குறித்து நகை வியாபாரிகளிடம் கேட்டதற்கு `ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.500 முதல் ரூ.600 வரை அதிகரிக்கும்' என்கின்றனர். வரி என்று வந்துவிட்டால், சாமானிய மனிதனுக்குச் சுமை கூடுமேயன்றி நிச்சயமாகக் குறையப்போகிறதா என்ன? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close