Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள் முதல்... பிக் பாஸ் வீட்டின் 30 கேமராக்களின் ஜாதகம் வரை நேற்றைய ஹிட்ஹாட் செய்திகள்! #VikatanTopHits

தனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம்! - சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள் #VikatanExclusive

 இந்த வீட்டில் இருந்துதான் சசிகலாவுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் சென்று சேர்ந்தன. சிறைத்துறைக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக பெண் அதிகாரி ரூபா பதவியேற்றார். அவர் வந்த பிறகுதான்... மேலும் படிக்க 

உமா பாரதி, எடியூரப்பா, சசிகலா! - கர்நாடகாவை கதிகலக்கும் பெண் டி.ஐ.ஜி. ரூபா

இதுதான் அவருடைய சுபாவம். அரசுப் பணியில் நேர்மையாகச் செயல்படுவது என்பது அதிகாரிகளின் கடமைகளில் ஒன்று. அதை மிகச் சரியாகக் கடைபிடித்து வருகிறார். அவருடைய குடும்பத்தில் பெற்றோர் இருவரும் அரசு அதிகாரிகள். அவருடைய தங்கை ரோகிணி, ஐ.ஆர்.எஸ் அதிகாரி” என விவரித்த பெங்களூரு அரசு அதிகாரி ஒருவர்... மேலும் படிக்க

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அந்த 30 கேமராக்களின் ஜாதகம் இதுதான்! #BiggBossTamil

இதன் 14X optical Zoom , போதுமான தூரம் வரை ஸூம் செய்து, தரமான வீடியோவை படம் பிடித்துவிடும். 1080 மற்றும் 720 பிக்ஸல் ஹெச்.டி வீடியோக்கள் கியாரண்டி. குறைந்த வெளிச்சத்திலும் குறையின்றி படம் பிடிக்க இந்த கேமராவால் முடியும். இதை வீட்டுக்கு வெளியே இருக்கும் கண்ட்ரோல் அறையில் இருந்தே ரிமோட் மூலம் இயக்கலாம்... மேலும் படிக்க.

யுவராஜ், கைஃபின் ‘வாவ்’ சேஸிங்.. ஜெர்சியைக் கழற்றிச் சுழற்றிய கங்குலி..! #OnThisDay #15YearsOfHistoricalChasing

கைஃபை 20 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் பிளிண்டாப். ரசிகர்களுக்கு டென்ஷன் எகிறியது. அஜய் ராத்ரா எட்டு ரன்களில் திருப்திப்பட்டார். முந்தைய போட்டியில் வெளுத்துக் கட்டிய அகர்கர் டக் அவுட் ஆனார். இன்னொரு முனையில் ஹேமங் பதானி மட்டும் போராடிக்கொண்டிருந்தார். 13 பந்தில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில்,... மேலும் படிக்க 

'பிக் பாஸில் வையாபுரி எலிமினேட் ஆயிடுவாரு!’ -ஆடியோ பேச்சுக்கு மனைவி ஆனந்தியின் அதிரடி!

இப்போ அவர்கிட்ட பேச முடியாது. ஒரு வாரமோ இரண்டு வாரமோ... அதுக்குள்ள எலிமினேட் ஆயிருவாரு. அப்படித்தான் சொல்லியிருக்காரு. ஏன்னா, மத்த வேலைகளைப் பார்க்கணும்ல... அதனால வந்துருவாரு... மேலும் படிக்க

வங்கியில் இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள்! #GST

வாடிக்கையாளருக்கு எம்.ஐ.சி.ஆர் காசோலை வழங்கல், இ-கணக்கு அறிக்கைகள் மற்றும் வங்கிக்கணக்குப் புத்தக நகல் வழங்கல், காசோலைக்குப் பணம் வழங்கலை நிறுத்துதல் (ஸ்டாப் பேமென்ட்) போன்றவற்றுக்கான கட்டணங்கள், கணக்கு இருப்பு விசாரணை (Balance Enquiry) கட்டணம், கணக்கை முடிப்பதற்கான கட்டணம்,... மேலும் படிக்க

சேரி பிஹேவியரும் எண்ணெய் அரசியலும்..! - கசியும் கதிராமங்கல ரகசியம் #3MinsRead #Analysis

எண்ணெய் எடுத்தால் வளர்ச்சி வரும், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்று எப்போதும் அரபு நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுபவர்கள்... உண்மையில், காவிரி டெல்டாவை  ஒப்பிட வேண்டியது வரலாற்றுக் காலம் தொட்டு பாலையாக இருக்கும் அரபு நாடுகளுடன் அல்ல... சமகாலத்தில் டெல்டா பிரதேசங்களாகயிருந்து பாலையாகிப்போன நைஜீர் டெல்டாவுடன்தான்... மேலும் படிக்க.

ஐ.டி நிறுவனங்களில் பிரபலமாகும் `சேர்கோசைஸ்’ - உட்கார்ந்த இடத்தில் உடற்பயிற்சி! #Video

ஐ.டி. ஊழியர்கள் உடற்பயிற்சி செய்யாம இருக்க இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அவர்களுக்குப் போதிய நேரமில்லை. இரண்டாவது, உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை. ஐ.டி ஊழியர்களின் ஃபிட்னெஸுக்கு என்ன செய்யறது என யோசிச்சப்போதான் இந்த ஐடியா கிடைச்சது. சேர்கோசைஸ் என்பது வெளிநாடுகளில் பிரபலமான நடன உடற்பயிற்சி முறை... மேலும் படிக்க

அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்? #HealthAlert

சிலர் ஒன்றுக்கு இரண்டு மாத்திரைகள்  உடல்நிலை சரியாகிவிடும் என்று கருதி அதிக அளவு டோஸ் உட்கொள்கிறார்கள். பாரசிட்டமால் மாத்திரை 3 கிராம் அளவுதான் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் அது அதிக டோஸாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது,  நம் உடல்நிலையைப் பொறுத்தும், ஆரோக்கியம் மற்றும் வயதைப் பொறுத்தும் ... மேலும் படிக்க
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement