Published:Updated:

கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

Published:Updated:
கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

’கடல் அட்டைகள் வைத்திருந்தவர் கைது'

'ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அட்டைகள் பிடிபட்டன'.

இது போல பல செய்திகளை நாம் சகஜமாக கடந்திருப்போம். ஆனால் பிடிபட்டவற்றின் மதிப்போ பல லட்சங்கள் . இந்த வாரம் கூட 'ராமேஸ்வரம் அருகே வில்லாயுதம் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் 300 கிலோ கடல் அட்டையைப் பதப்படுத்தி, இலங்கைக்குக் கடத்த இருந்தபோது போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 20 லட்சம்’ எனவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு விலை மதிப்புள்ளவற்றுக்கு இந்தியாவில் மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது? அட்டைகள் ஏன் அதிகம் கடத்தப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்பட்டோம்.

கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியாவிலும் கடல்அட்டைகளைப் பிடிக்க அனுமதி இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 16 வருடங்களாக அவற்றைப் பிடிக்க தடை இருந்து வருகிறது. இது மட்டுமல்ல, இதன் வரிசையில் மொத்தம் 53 கடல் வாழ் உயிரினங்கள் பிடிப்பதற்குத் தடை இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. இதை அந்நாட்டு மக்கள் உணவுக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றில் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ராஜ கடல் அட்டையானது அதிகமான விலைக்குப் போகும் . தடை அமலில் இல்லாதபோது மீனவர்கள் அதிகமாக அவற்றை வணிகம் செய்து வந்தனர். இப்போது நீடிக்கும் தடையால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவை அதிகமாகப் பிடிக்கப்பட்டால் அந்த இனம் அழிந்துவிடும் என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ஆனால், அவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளை பொறிக்கும் என மீனவர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது. இந்தத் தடையை நீக்குவதற்காக மீனவர்கள் சார்பாக கடந்த 16 வருடங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால், மத்திய அரசுதான் அசைந்து கொடுத்தபாடில்லை. இவற்றைப் பிடிப்பதற்குப் பின்னால் மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளது என்பது மீனவர்களின் கருத்து.  

கடல் அட்டைகளுக்கு எனத் தனியாக வலை கிடையாது. மீன் பிடிக்கும் வலையில் கடல் அட்டைகள் மாட்டிக் கொண்டு கரைக்குக் கொண்டு வந்தால் மீனவனுக்கு 7 ஆண்டு சிறைவாசமும் ரூபாய் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மீன்களைப் பிடிக்கும்போது, எதிர்பாராமல் வலையில் மாட்டிக் கொள்ளும் அவற்றால் சிறைவாசம் அனுபவித்த மீனவர்கள் ஏராளம். ஆனால், தடை செய்யப்பட்ட ஒன்றைத் திட்டமிட்டு விற்பனை செய்ய ஒரு கூட்டம் இயங்கத்தானே செய்யும். அதேபோலத்தான் தமிழ்நாட்டிலும் இதற்கு ஒரு நெட்வொர்க் இருக்கிறது.

இந்த அட்டைகள் பல ஆசிய நாடுகளில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலிலுள்ள நோய்கள் குணமாகும் என சீனாவில் மரபு வழி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிகமாக சோர்வு, இயலாமை, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மூட்டு வலி இந்த வகை நோய்களுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், கடல் அட்டைகளில் உள்ள காண்டிரைட்டின் சல்பேட், கீழ்வாத நோயையும் குணப்படுத்த உதவும் என்கிறார்கள் சீனர்கள். இத்தகைய சிறப்பு கொண்ட அட்டைகளைப் பிடிப்பதற்கு உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பக்கத்து நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இவற்றைப் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவற்றைப் பண்ணை முறையில் வளர்க்க அந்நாட்டு அரசு மானியமே வழங்குகிறது. ஆனால், ஆரோக்கியமான கடல் அட்டைகள் கிடைப்பது என்னவோ தமிழக கடற்பகுதிகளில்தான். அதனால்தான்  தமிழகத்தில் இருந்து இலங்கைப் பகுதிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் அவை கடத்தப்பட்டு வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism