Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளையதளபதி ஸ்டைலை பின்பற்றினால் உங்க மொபைல் பத்திரமாக இருக்கும்! #Funnytips

ப்போ இருக்குற நிலைமையைப் பார்த்தா இதயத்துல துடிப்பு இருக்கான்னு பாக்குறதைவிட மொபைல் போன் நோட்டிஃபிகேஷன் லைட்ல துடிப்பு இருக்கான்னு பாக்குறதுதான் ஜாஸ்தி. சமீப காலமா மொபைல் திருட்டு அதிகமாயிடுச்சு. இதைப் பார்க்கும் போது மொபைல் பிரியர்களுக்கு பகீர்னு இருக்கும்தான். இப்படிப் பயப்படுறவங்களோட மொபைல் திருடு போகாம இருக்க சில முத்தான யோசனைகள்!

மொபைல் போன்

ஸ்மார்ட்போன், ஐ போன் போன்றவற்றை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு ஒரு நல்ல நோக்கியா 1100வை செகண்ட்ஸில் வாங்கிக் கொள்ளலாம். இது மற்றவர்கள் செய்யும் திருட்டில் இருந்தும், நாம் செய்யும் திருட்டில் இருந்தும் தப்பிக்க உதவும். என்ன பாஸ் புரியலையா? இப்போ இருக்குற நிலைமையைப் பார்க்கும் போது, உங்க பாக்கெட்ல இருக்குற போனை நீங்க வெளியே எடுத்துப் பார்க்குற அடுத்த செகண்ட் அது வேற ஒருத்தன் பாக்கெட்டுக்குப் போறது உறுதி. வண்டியில மின்னல் வேகத்துல வந்து லவட்டிட்டு போயிடுறாங்க. அதில் இருந்து தப்பிக்க ஒரு 1100 மாடலைப்  பயன்படுத்தினால் திருடுன ஆளுக்கும் ஏமாற்றமா இருக்கும். நமக்கும் செலவு கம்மி. அதேமாதிரி இப்போல்லாம் காசு கேட்டாக் கூட கேள்வி கேட்காம கொடுக்குற பசங்க, அவங்க யூஸ் பண்ற போனைக் கேட்டா மேலயும் கீழேயும் பாக்குறாய்ங்க. நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமோன்னு பயம். ஒட்டுமொத்த சீக்ரெட்டும் கேலரிக்குள்ளதான் குத்த வச்சுருக்கும். இதே நீங்க 1100 யூஸ் பண்ணா இது மாதிரி தொல்லைகள்ல இருந்து சுலபமா தப்பிச்சுடலாம். இப்போ புரியுதா?

இது இரண்டாவது வழி. நீங்க ஸ்மார்ட் போன்தான் யூஸ் பண்ணுவேன், அதையும் நான் ரோட்டுல போகும் போதுதான் யூஸ் பண்ணுவேன்னு அடம் பிடிச்சா, இந்த ஐடியாவைத்தான் பாலோ பண்ணணும். ஒரு குயிக் ஃபிக்ஸ் வாங்கி கையில நல்லா தேய்ச்சு போனை அதோட ஒட்டி வெச்சுக்குறது நல்லது. எனக்கு கம் அலர்ஜினு சொல்ற ஆளுங்க எல்லாம் ஒரு கயிறு வாங்கி போன் கூடவே உங்க கையையும் கட்டி வெச்சுக்கங்க. நம்ம விஜய் கூட 'மதுர' படத்துல இதே டெக்னாலஜியத்தான் யூஸ் பண்ணியிருப்பார். என்ன, வழிப்பறி வந்தா நான் உங்க கைக்குப் பொறுப்பு இல்லை மக்களே. 

விஜய் மொபைல்

இது மூன்றாவது டைப் மக்களுக்கு. 'போனை நான் பார்த்துகிட்டே இருப்பேன் ஒரு நிமிஷம் கூட என் கருவிழியில இருந்து போனோட அச்சு மிஸ்ஸாகக் கூடாது'ன்னு நினைக்கிறவங்க, கழுத்துல ஒரு டேக் மாட்டிகிட்டு போனை அதுல தொங்க விட்டுருங்க. தங்கச்செயினே பொசுக்குனு பறிபோற யுகத்துல கயிறு காப்பாத்துமா என்ன? கொஞ்சம் காஸ்ட்லியான டேக்னா தாங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதை யூஸ் பண்றதுக்கு முன்னாடி கழுத்துக்குக் கொஞ்சம் இன்ஸூரன்ஸ் போட்டு வெச்சுக்கங்க. 

இது கொஞ்சம் புத்திசாலித்தனமான முறை. நீங்க இல்லுமினாட்டியா இருந்து, உங்களுக்கு மொபைல் போன் திருடு போறது முன்னாடியே தெரிஞ்சுட்டா, ஒரு பொம்மை மொபைலை வாங்கி வெச்சுக்கங்க. சும்மாக்காச்சிக்கும் அந்த பொம்மை போனை எடுத்து கொஞ்ச நேரம் அதை கண் சிமிட்டாம யூஸ் பண்ணிகிட்டே இருங்க. பக்கத்துல திருடுறவங்க இருந்தா இந்த டெஸ்டிங் முறையில தெரிய வரும். ஒருவேளை அந்த ஏரியாவுல திருடுறவங்க இருந்தா பறிபோறது உங்க பொம்மை போன்தான். பொம்மை போனை யாரும் சீண்டலேன்னா, உங்க ஒரிஜினல் போனை எடுத்து தைரியமா உபயோக்கிக்கலாம். எனக்கு தெரிஞ்சு இது ரொம்ப யூஸ். (என்னது லாஜிக்கே இல்லையா? இல்லுமினாட்டினாலே லாஜிக் இல்லதான்)

அட இது எதுக்குமே நீங்க சரியா வர மாட்டீங்கன்னு நினைக்கிறீங்களா? மொபைல் போனே யூஸ் பண்ணாதீங்க. பேசாம செல்லுக்கும் பில்லுக்கும் ஆகுற செலவை நீங்க யார்கிட்ட பேசணும்னு நினைக்கிறீங்களோ அவங்களை ஒரு பஸ் புடிச்சோ, ஆட்டோ புடிச்சோ, ஒரு கார் புடிச்சோ, இல்ல இன்னும் ஒரு சிலர் மொபைலுக்குச் செலவு பண்ற காசுக்கு ஒரு ஹெலிகாப்டர் புடிச்சோ நேர்லையே போய் பார்த்துட்டு வந்துருங்க. நேர்ல பார்த்த மாதிரியும் ஆச்சு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement