Published:Updated:

தனி மாநில கோரிக்கை: டார்ஜிலிங்கில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

தனி மாநில கோரிக்கை: டார்ஜிலிங்கில் வலுக்கும் மக்கள் போராட்டம்!
தனி மாநில கோரிக்கை: டார்ஜிலிங்கில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

தனி மாநில கோரிக்கை: டார்ஜிலிங்கில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

டார்ஜிலிங்கில், ‘கூர்க்காலாந்து’ எனத் தனி மாநிலம் வேண்டி அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டம் வன்முறை நிறைந்த கலவரமாக வெடித்து, தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர்.  அவர்கள், தனி மாநில உரிமை கேட்டுப் போராடிவருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். காலவரையற்ற போராட்டம், கடையடைப்பு என இருந்து வந்த போரட்டத்தில், கூர்க்கா அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதால் தீவைப்பு, கடை உடைப்பு என மக்கள் போராட்டம் கலவரமாக மாறியது.

இதைத்தொடர்ந்து, தற்போது டார்ஜிலிங் பகுதி போராட்டக்காரர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் கூர்க்காலாந்து போராட்டம் மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் தற்போது மாணவர்களும் இறங்கியுள்ளனர். இசை, வாத்தியம் என டார்ஜிலிங் நகர் முழுவதுமாக வலம் வந்து மாணவர்கள் தங்கள் கோரிக்கையை மக்களுக்கு எடுத்துக்கூறிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு