Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்தியப் பிரதேச மருத்துவமனைகளில் ஜோசியர்கள் - இது லிஸ்ட்லயே இல்லையே!

மத்தியப்பிரதேச மருத்துவமனைகளில், புற நோயாளிகளுக்கு ஜோசியர்களும் வாஸ்து நிபுணர்களும் சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற செய்தி பரவ, பற்றி எரிந்தன சோஷியல் மீடியாக்கள். இப்போது, அந்தத் கவலில் உண்மை இல்லை என அறிவித்திருக்கிறது, மாநில அரசாங்கம். உண்மையா இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை. 'செஞ்சாலும் செய்வாங்க' என்ற நம்பிக்கையை நமக்கு அளித்திருப்பதுதான் பா.ஜ.க-வின் மூன்றாண்டு கால சாதனை. இன்னும் வேறு யாரை வைத்தெல்லாம் சிகிச்சை அளிக்கலாம் என பா.ஜ.க-வுக்கு சில யோசனைகள்.

ஜோசியர்கள்

போட்டோஷாப் கில்லாடிகள்:

'மாயா மாயா... எல்லாம் மாயா' - குஜராத் தொடங்கி உத்தரப்பிரதேசம் வரை பா.ஜ.க-வுக்கு கைகொடுக்கும் ஒரே அஸ்திரம், போட்டோஷாப். சிங்கப்பூராக மாறிய குஜராத், பப்புவா நியூ கினியாவாக மாறிய உத்தரப்பிரதேசம் என கலந்துகட்டி அள்ளிவிடுகிறார்கள். இவர்களில், நாலு பேரைப் பிடித்து மருத்துவமனை வாசலில் உட்காரவைத்தால் வரும் பேஷன்ட்களின் ஸ்கேன், ஈ.சி.ஜி. ரிப்போர்ட்டுகளை எல்லாம் போட்டோஷாப்பில் நார்மல் என மாற்றிவிடுவார்கள். 'தனக்கு நார்மல்னு தெரிஞ்சதும் பேஷன்ட்டுக்கு வர்ற நம்பிக்கையே அவரை குணமாக்கும்' என இதற்கு விளக்கம் சொல்லி சமாளித்துக்கொள்ளலாம்.

வெள்ளையங்கிரி அங்கிள்கள்:

'அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இன்று முதல் நீ 'அணுவை ஆண்ட ஆபத்பாந்தவன்' என அழைக்கப்படுவாய்' - மோடியை பற்றி இப்படிப் புகழ்வதற்கு ஒரு புரவலர் கூட்டமே இருக்கிறது. அவர்களில், நான்கு பேரை லீஸுக்கு எடுத்து மருத்துவமனைகளில் அமர வைத்துப் பாடல்கள் பாடச் சொல்லலாம். இசையைவிட சிறந்த மருந்து உண்டோ? எனவே, வரும் அனைவருக்கும் சட் சட்டென நோய்கள் குணமாகும்.

பசு மாடு எம்பிபிஎஸ்:

புதிதாகக் கிளம்பியிருக்கும் 'அடேங்கப்பா' க்ரூப் இது. 'பசு மாட்டின் கொம்பு அல்ட்ரா வயலட் கதிர்களை உள்வாங்கும் சக்திகொண்டது, பசு மாடு நம்மைப் பார்த்தாலே பத்து வகையான ஸ்கின் ப்ராப்ளங்களுக்கு முற்றுப் புள்ளி' எனக் கிளப்பிவிடுகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையென்றால் ஒவ்வொரு மருத்துமனையிலும் நான்கு பசுமாடுகளை கட்டி வைத்துவிடலாம். நோயா... அது எங்க இருக்கு? என நாடு சுபிட்சமடைந்துவிடும்.

நியூமராலஜி நிபுணர்கள்:

ஏ.ஆர் ரஹ்மானுக்கே பஞ்சாயத்து பண்ணின க்ரூப்பாச்சே! சீக்கிரமே 'இந்தியில் பேர் இல்லாததுதான் இத்தனை இன்னல்களுக்குக் காரணம்' என ஸ்டேட்மென்ட் வந்தாலும் வரும். உடனே வாசலுக்கு ரெண்டு நியூமராலஜி நிபுணர்களை உட்காரவைப்பார்கள். உள்ளே வரும் நோயாளிகளிடம், 'உன் பேரு சங்கிலியா? இனி உன் பேரு கங்குலி, உன் பேரு ரவி மேஸ்திரி இல்ல, ரவி சாஸ்திரி' என எகிடுதகிடாக பேர் வைத்தால்... நோய்கள் எல்லாம் போயே போயிந்தி.

பதஞ்சலி ப்ராடக்ட்ஸ்:

பாபா ராம்தேவ், சுதந்திரப் போராட்டத்தில் சுதேசிப் பொருட்களை விற்றார் என்ற கதை மட்டும்தான் விடவில்லை. மற்றபடி எல்லா பப்ளிசிட்டி ஸ்டன்ட்களையும் செய்தாயிற்று கலக்கப்போவது யாரு உள்பட. உச்சக்கட்ட ப்ரொமோஷனாக, 'பதஞ்சலி பொருள்களைப் பயன்படுத்தினால், நோய்கள் அண்டவே அண்டாது' என மருத்துவமனை வாசலில் போர்டு வைத்து டீலர்ஷிப் தொடங்கலாம். இப்படிச் சொன்னா நம்புற கூட்டமும் இருக்கே! என்ன பண்ண? 

அதிர்ச்சி வைத்தியம்:

வைத்தியத்துள் சூப்பர் வைத்தியம், அதிர்ச்சி வைத்தியம்' என்பார் விசு. (உடனே போய் கூகுள்ல ஆராயக் கூடாது!) பி.ஜே.பி சார்பில் அதிர்ச்சி வைத்தியமளிக்கும் தகுதி ஒரே ஒருவருக்குத்தான். யெஸ். சுப்பிரமணியன் சுவாமி. அவரை வாசலில் உட்கார வைத்தால் மட்டும் போதும். பெர்ஃபாமென்ஸை எல்லாம் அவரே பார்த்துக்கொள்வார். அவர் வாயிலிருந்து கொட்டும் வார்த்தைகளைக் கேட்டால், அதிர்ச்சியில் நோய்களே 'ஆள விடுங்கய்யா சாமி' என ஓடிப்போகும். மிஷன் முடிந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close