வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (20/07/2017)

கடைசி தொடர்பு:12:07 (20/07/2017)

சென்னைக்கு இவ்வளவுதான் ஆயுள் முதல்.. “எலும்பு மருத்துவர் எச்.ராஜா..'' கமல் பதில் வரை.. நேற்றைய ஹிட்ஹாட் செய்திகள்! #VikatanTopHits

சென்னைக்கு இவ்வளவுதான் ஆயுள்.. அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

கடல்மட்ட உயர்வு காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் இருக்கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை நியூயார்க், மியாமி, பாஸ்டன் போன்ற நகரங்களும்,  இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, புதுச்சேரி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களும் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன.  மேலும் விவரங்களுக்கு... 

நமிதாவுக்குப் பதில் யார்? இது தெலுங்கு `பிக் பாஸ்' பிரபலங்கள் பயோ டேட்டா!

ஜூலி மாதிரி சிலருக்கு லைம் லைட்டுக்கான வாய்ப்பும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துள்ளது. தவிர, ட்ரெண்டில் இருக்கும் பல பிரபலங்கள் `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதே நிலைமைதான் தெலுங்கு `பிக் பாஸ்'-க்கும்.  மேலும் விவரங்களுக்கு... 

‘சசிகலாவின் சிறை வீடியோ வெளியானது எப்படி?’ - வில்லங்கத்தை விவரிக்கும் கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி #VikatanExclusive

தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகள் குறித்தும் ரூபா, முகநூலில் பதிவு செய்வது வழக்கம். அப்போது காவல் பணி குறித்து வெளிப்படையாகப் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் சமூகத்தைச் சார்ந்தே இருப்பது அவரது பதிவின் மூலம் தெரிகிறது. அவரது முகநூலில் 25,482 பேர் பாலோவர்களாக உள்ளனர்.  மேலும் விவரங்களுக்கு... 

ஊட்டிக்குச் செல்பவர்களை மிரளவைக்கும் 'ஷேரிங் கேப்'

ஒன்னிபாளையம் அருகே வரும்போது, காரில் இருந்த இன்னொருவர், யூரின் வருது நிறுத்துங்க என்று கஷ்ட குரல் எழுப்ப, ஒன்னிபாளையம் ரயில்வே பாலத்திற்கடியில்  நிறுத்தப்பட்டிருக்கிறது கார்.  கார்  நின்றதும் காருக்குள் இருந்த நபர்கள் கார் கண்ணாடிகளை ஏற்றியிருக்கிறார்கள்.  மேலும் விவரங்களுக்கு... 

20 ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவை எல்லாம் இன்று நிஜம்... இலுமினாட்டியா பில் கேட்ஸ்?

கேட்ஸ் சொன்னது : வேலை தேடுவோர் அவர்களின் விருப்பம், தேவைகள் மற்றும் சிறப்புத்தகுதிகள் பற்றி ஆன்லைனில் குறிப்பிட்டு, அதற்கேற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கண்டறியும் வாய்ப்பிருக்கிறது. நிஜத்தில் நடந்தது : நெளக்ரி, மான்ஸ்டர், லிங்கெட்இன் போன்ற ஆன்லைன் தளங்களில் தங்களது தேவைக்கேற்ப ஃபில்டர் செய்து, வேலைவாய்ப்பைக் கண்டறியும் நிலை தற்போது  மேலும் விவரங்களுக்கு... 

``இயக்குநர் ஷங்கர் என்னை நடிக்கச் சொன்னார்`` - டாப் 10 மூவிஸ் சுரேஷ் குமார்.

``24 மணி நேரம்கிறதே நிறைய டைம்தான். எனக்குப் பிடிக்காத வார்த்தை `பொழுதுபோக்கு`. கிடைக்கிற நேரத்தை நல்லபடியா பயன்படுத்தலாம். அதை ஏன் போக்கணும்? திங்கள் முதல் வெள்ளி வரை காலேஜ்ல வேலை. சனி, ஞாயிறுகளில் எல்லாம் டிவி-க்கு முன்னாலிருந்து நேரத்தைச் செலவிடுறாங்க. நான் டிவி-க்கு உள்ளே போயிருக்கேன்.  மேலும் விவரங்களுக்கு... 

“தண்ணீரை நாங்கள் பரிசோதிக்கவில்லை... இப்போது கையில் எந்த டேட்டாவும் இல்லை!” - ஓ.என்.ஜி.சி நடத்திய ‘அடடே’ பிரஸ் மீட்

''தமிழகத்தில் மொத்தம் 700 எரிவாயுக் கிணறுகள் இருக்கின்றன. அதில், 183 கிணறுகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.  இந்தியாவில், திரிபுராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிக அளவில் எண்ணெய் எடுக்கப்படுகிறது''.  மேலும் விவரங்களுக்கு... 

வேலை செய்யுமிடத்தில் தண்ணீருக்குள் குதித்து ’ரோபோ’ தற்கொலை... அட நிஜமாதாங்க!

அலுவலகத்தில் வேலை அழுத்தம் காரணமாக அல்லது வேறு சில காரணங்களுக்காகப் பணியாளர்கள் தற்கொலை என்ற செய்தியை அடிக்கடி நாம் செய்திகளில் வாசித்திருப்போம். முதல்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை(?) செய்துகொண்டிருக்கிறது.  மேலும் விவரங்களுக்கு... 

“எலும்பு மருத்துவர் எச்.ராஜா... தம்பி அமைச்சர் ஜெயக்குமார்...!” - அமைச்சர்களை விலாசும் கமல்

கமல் பதிவு செய்த ட்வீட் லேசாக அரசியல் பேசினாலும், அது பலருக்கும் புரியவில்லை. இன்று காலை , பா.ஜ.க-வின் எச்.ராஜா கமலை கடுமையாக விமர்சித்து இருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து,   மேலும் விவரங்களுக்கு... 

அதிகம் செல்போன் பயன்படுத்துறீங்களா? மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்!

பொதுவாகவே, அழைப்புகளின்போது, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி (Radio-Frequency) எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளியாகும். இது, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று. செல்போனில் இருந்து வெளியாகும் மின் காந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சநஞ்சம் அல்ல... மேலும் விவரங்களுக்கு... 


டிரெண்டிங் @ விகடன்