Published:Updated:

பிச்சையெடுத்தால் சாதி சான்றிதழ்! கலெக்டரிடம் கண்கலங்கிய மக்கள்

பிச்சையெடுத்தால் சாதி சான்றிதழ்! கலெக்டரிடம் கண்கலங்கிய மக்கள்

பிச்சையெடுத்தால் சாதி சான்றிதழ்! கலெக்டரிடம் கண்கலங்கிய மக்கள்

பிச்சையெடுத்தால் சாதி சான்றிதழ்! கலெக்டரிடம் கண்கலங்கிய மக்கள்

பிச்சையெடுத்தால் சாதி சான்றிதழ்! கலெக்டரிடம் கண்கலங்கிய மக்கள்

Published:Updated:
பிச்சையெடுத்தால் சாதி சான்றிதழ்! கலெக்டரிடம் கண்கலங்கிய மக்கள்

முன்னோர்கள் செய்த மரியாதைக்குறைவான குலத்தொழிலை இப்பவும் செய்தால்தான் சாதிச் சான்றிதழ் தருவோம் என்று அதிகாரிகள் இழிவு படுத்துவதாகவும், இதனால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதாகவும் கணிக்கர் சமூக மக்கள் இன்று மதுரை கலெக்டரிடம் முறையிட வந்தார்கள். கலெக்டரை சந்தித்து மனுக்கொடுத்தபோது அவர்கள் கண்கலங்கினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.


 

இது குறித்து கணிக்கர் சமூக மக்களிடம் பேசினோம், ''நாங்கள் பழங்குடி கணிக்கர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பரவலாக வசித்து வருகிறோம். எங்கள் முன்னோர்கள் கைரேகை பார்த்தும் அதன் பின் கடை நிலை வேலைகளைச் செய்தும் வந்தார்கள். இப்போது நாங்கள் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வருகிறோம். இன்னும் சிலர் கூலிவேலைகள் செய்து வருகிறார்கள். இந்த கஷ்டமெல்லாம் எங்களோடு போகட்டும் எங்கள் பிள்ளைகளாவது முன்னேறட்டும் என்று பள்ளிகளில் சேர்த்துள்ளோம். படித்துக்கொண்டிருக்கிற பிள்ளைகளுக்கு அரசாங்கம் தருகிற சலுகைகளைப் பெறுவதற்கும் பிள்ளைகளைப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ப்பதற்கும் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது.

அதற்கு விண்ணப்பித்து மதுரை கிழக்கு தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் கேட்டால், கணிக்கர் சாதியினர் கைரேகைப் பார்ப்பார்கள், பிச்சை எடுப்பார்கள். அந்த வேலைகளை இப்போதும் செய்தால்தான் சாதிச் சான்றிதழ் தர முடியும் என்று எங்களை அசிங்கப்படுத்துகிறார்கள். முன்பு செய்த இழிவான தொழிலை இப்போதும் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். நாங்கள் வேறு தொழில் செய்தால் என்ன, எங்களுடைய சாதிச் சான்றிதழ் தருவதற்கு என்ன தடை. பள்ளி நிர்வாகமும் சாதிச் சான்றிதழ் கொண்டுவந்தால்தான் பிள்ளைகளைப் படிக்க அனுமதிக்கமுடியும் என்கிறார்கள். அதனால்தான் கலெக்டரிடம் முறையிட வந்தோம்'' என்றார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism