Published:Updated:

தீப்பிடித்த ரயில் பெட்டியில் வெடிபொருட்கள் இருந்ததா? அதிகாரிகள் ஆய்வு!

சென்னை: தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டியில் வெடிபொருட்கள் இருந்ததா என   தடயவியல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

டெல்லியில் இருந்து  சென்னை சென்ட்ரல்  நோக்கி வந்த  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின்  எஸ்-11 பெட்டி,ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தீப்பிடித்து எரிந்தது. இதில் 28  பயணிகள் பலியானார்கள்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் முகுல்ராய்  உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்த எஸ்-11 பெட்டியை 3 பேர் கொண்ட தடயவியல்  நிபுணர்கள்  இன்று ஆய்வு செய்தனர்.

##~~##
மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? வெடி பொருட்கள் எதுவும் இருந்து  வெடித்ததா? அல்லது எளிதில் தீ பற்றக்கூடிய மண்எண்ணை, பெட்ரோல் போன்றவை  அந்த பெட்டியில் இருந்ததா? என அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
பெட்டியில் கிடந்த தடயங்கள், எரிந்து கிடந்த பொருட்கள் ஆகியவற்றை சேகரித்தனர்.  பெட்டி முழுவதும் அணு அணுவாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை  ஒரு மணி நேரம் நடந்தது. சேகரிக்கப்பட்ட தடயங்களை நுணுக்கமாக ஆய்வு செய்தபிறகு  விபத்திற்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.