Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெண்பொங்கல் தெரியும்; அதென்ன சிலந்திப் பொங்கல்? இது நாடாளுமன்றப் பரபரப்பு!

‘‘அத்தியாவசிய மூலப்பொருள்களின் விலை உயர்வால், இன்று முதல் உணவு விலை உயர்கிறது’’ - இப்படி ஒரு பலகை போன வருடம் அந்த உணவகத்தின் வாசலில் தொங்கியது. அறிவிப்பைப் பார்த்த பலர் திக்குமுக்காடிப் போனார்கள். பருப்பு சப்ஜி 2 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், ரொட்டி 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாகவும், பொங்கல் - 6 ரூபாய்,  டீ - 3 ரூபாய் எனப் புதிய விலைப் பட்டியலில், உணவுப் பொருள்களின் விலை 'தாறுமாறாக'  உயர்ந்திருந்தது.

‘‘இது அநியாயம்’’ என்று போர்க்கொடி தூக்கினார்கள் அந்த கேன்டீனின் வாடிக்கையாளர்கள். இன்னொரு நாள், அந்த கேன்டீனில் தரப்பட்ட உணவில், ஒரு நாள் பூச்சி கிடந்தது. அதைச் சாப்பிட்டவருக்கு வாந்திபேதி, மயக்கம் என்று மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். விஷயம் பெரிதானது. இப்போதும் அதேபோன்றதொரு சம்பவம், அதே கேன்டீனில் நடந்து பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. 

பொங்கல்

 

அந்த உணவகம் - டெல்லியில் உள்ள நம் இந்திய நாடாளுமன்ற கேன்டீன். விலையேற்றத்தால் பாதிப்படைந்த வாடிக்கையாளர்கள், நம் எம்பி-க்களே! பூச்சி கிடந்த உணவைச் சாப்பிட்டு வாந்தி எடுத்ததும், பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவர்தான். இப்போது அதே பிரச்னையில், பாராளுமன்ற கேன்டீன் மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் பணிபுரியும் சீனியர் அதிகாரி சீனிவாசன் என்பவர், நேற்று முன்தினம் கேன்டீனில் பொங்கல் ஆர்டர் செய்து சாப்பிட்டார். ‘‘இரண்டு தடவைதான் எடுத்துச் சாப்பிட்டேன். திடீரென்று ஒரே வாந்தியாக வந்தது. என் தலை சுற்ற ஆரம்பித்தது. என்னவென்றே தெரியவில்லை. அப்புறம்தான் பொங்கலைச் சோதனை செய்தால், அதில் சிலந்தி ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருந்தது. பாராளுமன்ற கேன்டீனில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இங்குள்ள கேன்டீனில் உணவுப் பொருள்கள் தரமாக இல்லை. சுத்தமாகவும் இல்லை. இது இப்படியே நீடித்தால் என்ன செய்வது?’’ என்று மருத்துவப் படுக்கையில் இருந்தபடி சம்பவத்தை விவரிக்கிறார் சீனிவாசன்.

பொங்கல்

பாராளுமன்றத்தில் முக்கியமான மீட்டிங் என்றால், பிரதமர் மோடி இங்குள்ள கேன்டீனில்தான் ரெகுலராக உணவு அருந்துவாராம். உடனே இந்தச் சிலந்திப் பொங்கல் சம்பவம், பிரதமர் காதுகளுக்குப் போக, ‘‘தரமான உணவுப் பொருள்கள் பாராளுமன்ற கேன்டீனில் வழங்கப்பட வேண்டும்’’ என்று ஆர்டர், கேன்டீன் கான்ட்ராக்டருக்குப் பறந்திருக்கிறது.

விஷயம் என்னவென்றால், இதற்கு முன்பு ஒருமுறை தால் சப்ஜியில் கரப்பான் பூச்சி கிடந்ததைச் சாப்பிட்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவமும் சீனிவாசனுக்கு நடந்துள்ளதாம். சிலந்திப் பொங்கல் சாப்பிட்டு அவர் அட்மிட் ஆவது, இது இரண்டாவது தடவை. ‘‘முதல் முறை நடந்தபோதே இது பற்றி நான் புகார் சொன்னேன். யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாட்டின் பிரதமர் சாப்பிடும் கேன்டீனிலே இப்படியா? இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்கிறார் அவர். சம்பவத்தன்று பொங்கலும் தயிர் சாதமும் ஆர்டர் செய்திருந்தாராம் சீனிவாசன். நல்லவேளையாக, தயிர் சாதத்தைச் சாப்பிடவில்லை என்கிறார்.

‘சாம்பார்ல பெருச்சாளி இருக்கு... மோரை ஊத்துங்க; அதுல பூனை இருக்கானு பார்ப்போம்’ என்கிற வடிவேலு பட காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close