Published:Updated:

இமான் அண்ணாச்சி உதவி கேட்பது இதற்காகத்தான்!

இமான் அண்ணாச்சி உதவி கேட்பது இதற்காகத்தான்!
இமான் அண்ணாச்சி உதவி கேட்பது இதற்காகத்தான்!

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் 'குட்டி சுட்டீஸ்' மற்றும் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி. 'குட்டி சுட்டீஸ்' நிகழ்ச்சி தந்த ரீச் அவரைப் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே. ஆனால், இங்கே சொல்லப்போகும் செய்தி அதுவல்ல, அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்து வரும் ஒரு நல்ல விஷயத்தைப் பற்றிய செய்திதான் இது.

தான் காய்கறி விற்றபோது காய்கறி விற்கும் சைக்கிளை வாங்கிக் கொடுக்ககூட யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டதை பல நாள்கள் நினைத்து கஷ்டப்பட்டிருக்கிறார் இமான் அண்ணாச்சி. பல சினிமா, டிவி வாய்ப்புகளால் இத்தனை ஆண்டுகள் கழித்து நல்ல நிலையில் இருப்பதால், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என எண்ணி, ஒரு டிரஸ்ட் ஆரம்பித்திருக்கிறார். இணைந்த கைகள் என்கிற டிரஸ்ட்டின் வாயிலாக மேற்படிப்பு படிக்க கஷ்டப்படும் மாணவர்களுக்கும் சொந்தத் தொழில் தொடங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கும் 20,000 ரூபாய் வரை தந்து இட்லிக்கடை, தள்ளுவண்டிக்கடை போன்றவை அமைக்க பண உதவி செய்து வருகிறார். 

http://annachiikt.com/ என்கிற இணைய தளத்தில் பண உதவி கொடுக்க விரும்புவோரும் பெற விரும்புவோரும் தன்னை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இணைந்த கைகள் டிரஸ்ட்டை ஆரம்பித்து இரண்டு வருடம் ஆனபோதிலும், தற்போதுதான் தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி உதவி கேட்டு வருகிறார் இமான் அண்ணாச்சி!