Published:Updated:

புனே குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்ட தாக்குதல்: உள்துறை செயலர்

புனே குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்ட தாக்குதல்: உள்துறை செயலர்
புனே குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்ட தாக்குதல்: உள்துறை செயலர்

புனே:  புனேவில் நேற்றிரவு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நன்கு திட்டமிட்ட ஒன்று என மத்திய உள்துறை செயலர்  ஆர்.கே. சிங் தெரிவித்துள்:ளார்.

புனேவில் நேற்று இரவு 4 இடங்களில் அடுத்தடுத்து ஏழு நிமிட இடைவெளிக்குள் குண்டுகள் வெடித்தன. வெடித்த குண்டுகள் அனைத்தும் சக்தி குறைந்தவை என்பதால், யாருக்கும் உயிரிழப்புகளோ அல்லது காயமோ இல்லை.

.பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இதை தொடர்ந்து இந்தப் பகுதிகள் அனைத்தும் போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன. மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை, வெடிகுண்டு சோதனைப் பிரிவு, குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் அடங்கிய குழு ஆகியன குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு விரைந்தன.

புனே குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்ட தாக்குதல்: உள்துறை செயலர்

அந்தப் பகுதிகளில் இருந்த 6 குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.வெடித்த குண்டுகள் அனைத்தும் சக்தி குறைந்தவை என்பதால், இழப்புகள் பெரிய அளவில் இல்லை.

இது பயங்கரவாதிகளின் சதிச் செயலா? என்று அந்த மாநில காவல்துறைத் தலைவர் சஞ்சீவ் தயாளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது இது பற்றி கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்காது. காவல்துறையின் பல்வேறு பிரிவுகள்  குண்டு வெடிப்பு குறித்து அலசி வருகின்றன என்றார்.

##~~##
மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சுஷில் குமார் ஷிண்டே இரவு பாராட்டு விழா ஒன்றுக்காக புனே பயணம் மேற்கொள்ளவிருந்தார். கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அந்த நிலையில், இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரியில் புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

14 மாநிலங்கள் உஷார்

குண்டுவெடிப்பை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 14 மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டன.மேலும் தேசிய புலனாய்வு மையம் மற்றும் தேசிய பாதுகாப்பு படை ஆகியவையும் உஷார்படுத்தப்பட்டன. 

திட்டமிட்ட தாக்குதல்

இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நன்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்று உள்துறை செயலர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

 குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர்களும், வயர்கள் இணைக்கப்பட்ட கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலா?

இத்தாக்குதல் தீவிரவாதிகளின் கைவரிசையா என்று புனே போலீஸ் கமிஷனர் குலாப்ராவிடம் கேட்டபோது, அதனை மறுத்த அவர், இது சில விஷமிகளின் செயல்களாக இருக்கலாம் என்றார்.

ஒருவர் காயம்

அதே சமயம் வெடித்த குண்டுகளில் ஒன்றை கையில் கொண்டு சென்ற நபர் ஒருவர், இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த உள்துறை செயலர் ஆர்.கே. சிங்,இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமா என்ற கோணத்தையும் மறுப்பதற்கில்லை என்றார்.

இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு மைய (National Investigation Agency -NIA) அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.