Published:Updated:

தாகத்தில் தவிக்கும் திண்டுக்கல்!

தாகத்தில் தவிக்கும் திண்டுக்கல்!
தாகத்தில் தவிக்கும் திண்டுக்கல்!

தாகத்தில் தவிக்கும் திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமான அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டுள்ளன. மாநகராட்சி பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட வறண்டு விட்டது. இதனால் மாநகராட்சிப் பகுதிகளில் 50 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் வராமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தாகத்தில் தவிக்கும் திண்டுக்கல்!


 

சுற்றுலாத்தளமான கொடைக்கானல், ஆன்மிக நகரான பழநி ஆகிய நகரங்களும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கின்றன. நிலத்தடி நீர் மட்டமும் அதள பாதாளத்தில் உள்ளது. இதனால் கிராமப்பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. கிராமப்புரங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது. இதனால் மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் சாலை மறியல் நடந்து வருகிறது. வாரம்தோறும் திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காலிக்குடங்களுடன் தண்ணீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.  இந்நிலையில் இன்று நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் பெருமாள்கோவில்பட்டி, ராகலாபுரம், தெப்பகுளத்துபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.