Published:Updated:

மும்பை பூங்காவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இருக்கைகள்!

மும்பை பூங்காவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இருக்கைகள்!
மும்பை பூங்காவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இருக்கைகள்!

மும்பை பூங்காவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இருக்கைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை கோலபாவில் உள்ள சாகார் உப்வன் பார்க்கில் ‘டெட்ரா பாக் கார்டன்ஸ்’ ஆல் (Tetra Pak Cartons) ஆன இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

’Tetra Pak Cartons’ மறுசுழற்சி செய்யக் கூடியது. காகிதம், பாலித்தீன் மற்றும் அலுமினியத்தில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் டெட்ரா பாக். அதில் 75% காகிதம், 20% பாலித்தீன் மற்றும் 5% அலுமினியம் இருக்கும்.

மும்பையிலுள்ள சுற்றுச்சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘ரூர் கிரீன்லைப்’ சுற்றுச்சூழல் குறித்த பயிற்சி பட்டறைகளை அவ்வப்போது நடத்துவது வழக்கம். அடுத்த முயற்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக மறுசுழற்சி செய்யக்கூடிய டெட்ரா பாக் கார்ட்டன்ஸை மக்கள் மத்தியில் சேகரித்து வந்தது. இதற்காக இப்பகுதியின் பல இடங்களிலும் சேமிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு விழிப்புஉணர்வு வழங்கப்பட்டது. மக்களும் பால், கூல் டிரிங்ஸ் அடைக்கப்பட்ட டெட்ரா பாக் கர்ட்டன்ஸை சேமிப்பு மையங்களில் கொண்டு வந்து போட்டனர். ஒவ்வொரு நாளும் சேமிக்கப்பட்ட டெட்ரா பாக் கர்ட்டன்ஸ் கடந்த 3 ஆண்டுகளில் அதிகமானது மறுசுழற்சி செய்யப்பட்டு மக்களைக் கவரும் விதத்தில் சாகார் உப்வன் பார்க்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுசூழலுக்கு உகந்த இருக்கைகளை மக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு